யாரும் தொடாத உயரத்தில் தோனி படைத்த உலக சாதனை..! ஆச்சரியத்தில் மற்ற விக்கெட் கீப்பர்கள்..!

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் வெற்றி பற்றது.இந்நிலையில் நேற்று (ஜூலை 8)நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான இறுதி டி20 போட்டியில் தோனி அதிககீப்பிங்கில் இரண்டு புதிய சாதனைகளை செய்து அசத்தியுள்ளார்.
Pandya
நேற்று(ஜூலை 8) இங்கிலாந்தில் உள்ள கவுண்டி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்களை குவித்தது. பின்னர் களமிறங்கிய இந்திய அணி 18.3 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை மட்டும் இழந்து இலக்கை அடைந்து வெற்றி பெற்றது.

இந்த போட்டியில், ஜேசன் ராய், அலெக்ஸ் ஹேல்ஸ், இயன் மோர்கன், பேர்ஸ்டோ, பிளன்கெட் ஆகியோரின் 5 கேட்ச்களை பிடித்ததன் மூலம், ஒரு டி20 போட்டியில் அதிகமான கேட்ச்களை பிடித்த வீரர் என்ற புதிய சாதனையை தோனி படைத்துள்ளார். இவருக்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் கில்கிறிஸ்ட் ஒரு டி20 போட்டியில் 4 கேட்ச்கள் பிடித்து இரண்டாம் இடத்தில உள்ளார்.
ind
மேலும் இந்த போட்டியில் 5 கேட்ச்கள் பிடித்தன் மூலம் டி20 போட்டிகளில் 54 கேட்ச்களை பிடித்துள்ளார் தோனி. சர்வதேச டி20 போட்டிகளில் 50 கேட்ச்களை பிடித்துள்ள முதல் விக்கெட் கீப்பர் என்ற பெருமையம் தோனி பெற்றுள்ளார். ஏற்கனவே கடந்த ஜூலை 3 ஆம் தேதி மாஞ்சிஸ்டரில் உள்ள ஓல்ட் ட்ராட்போர்ட் மைதானத்தில் நடைபெற்ற இந்த தொடரின் முதல் டி20 போட்டியில், சர்வதேச டி20 போட்டிகளில் அதிக ஸ்டாம்பிங்(33) செய்த கீப்பர் என்ற சாதனையை படைத்திருந்தார் தோனி என்பது குறிப்பிடத்தக்கது.