படு ஸ்மார்ட்டான லுக்குக்கு மாறிய தோனி. எதற்காக இந்த சேன்ஞ் தெரியுமா – புகைப்படம் இதோ

Dhoni

தோனி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் இருந்து விலகி இந்திய ராணுவத்தில் பயிற்சி மேற்கொண்டார். அதன் பிறகு தற்போது தென்னாபிரிக்க அணிக்கு எதிரான டி20 போட்டியிலும் அவரது வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர் தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஒரு பதில் கிடைத்து உள்ளது.

தற்போது அவர் ஒரு ஸ்மார்ட்டான லுக்கில் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் இடம் பிடிக்காத டோனி தற்போது விளம்பர படத்தில் நடித்து வருகிறார். பிரபல ஆடை நிறுவன விளம்பரம் ஒன்றில் நடிக்கும் தோனி தற்போது அவரின் அந்த விளம்பர புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.

அவர் அடுத்து வரும் தொடர்களில் இடம்பிடிக்க பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார் இருப்பினும் அவர் மீண்டும் இந்திய அணியில் இடம் பிடிப்பாரா என்பது கேள்விக்குறியாக உள்ளது. தேர்வுக் குழு எடுக்கும் முடிவு தோனியின் ஓய்வு முடிவின் அழுத்தத்தை அதிகரித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.