என்னது என் மகனுக்கு வயாசாயிடுச்சா ? வைரலாக புகைப்படம் குறித்து – தோனியின் தாய் பேட்டி

Dhoni-mom
- Advertisement -

இந்திய அணியின் முன்னணி வீரரான தோனி தான் அறிமுகமான காலத்தில் கட்டுமஸ்தான உடலும், நீண்ட தலைமுடியாலும் ரசிகர்களால் பெரிதளவு கவரப்பட்டார். 10 ஆண்டுகளுக்கு முன்னர் தோனி வைத்திருந்த ஹேர் ஸ்டைல் இன்றளவும் ரசிகர்களை கவர்ந்த ஒரு விடயமாக பார்க்கப்படுகின்றது. அதனையடுத்து 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பை வென்ற பின் தோனி தனது தலைமுடியை மொட்டை அடித்து அனைவரையும் திகைக்க வைத்தார்.

- Advertisement -

அதன் பின்னர் அவ்வப்போது தனது ஹேர் ஸ்டைலை மாற்றி வரும் தோனி பிறகு தாடி வைக்க ஆரம்பித்தார். ஒவ்வொரு ஐ.பி.எல் தொடருக்கு முன்னரும் தனது அழகான ஹேர் ஸ்டைல் ரசிகர்களை கவரும் தோனி மீண்டும் 2019ஆம் ஆண்டு உலகக் கோப்பைக்கு முன்பு மொட்டைத்தலைக்கும் மாறினார்.

இதனிடையில் தற்போது பிசிசிஐ ட்விட்டர் பக்கத்தில் வெளியான ஒரு வீடியோ காட்சியில் தோனி சால்ட் அண்ட் பெப்பர் ஹேர் ஸ்டைலில், தாடி நரைத்து சற்றே சோர்ந்து இருந்தது போல காட்சி அளித்தார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அனைவரும் தோனி வயதானவர் என்றும் அவர் முடி நரைத்து, கண்ணும் ஓடி விட்டது என்றும் சில கருத்துக்களை குறிப்பிட்டு இருந்தனர். மேலும் அவருடைய முடி சாம்பல் நிறமாக நரைத்துப் போய் உள்ளதால் அவரை வயதானவர் என்றும் சிலர் கமெண்ட் செய்திருந்தனர்.

இந்நிலையில் இந்த கருத்துகளுக்கு பதில் அளித்த தோனியின் தாய் தேவகி தேவி தனது மகனுக்கு வயது ஆகவில்லை என்று மறுத்துள்ளார். மேலும் இது குறித்து கூறியதாவது : ஆம் நானும் தோனியின் புதிய தோற்றத்தை கண்டேன். ஆனால் தோனி அவ்வளவு வயதானவர் அல்ல எந்த ஒரு தாய்க்கும் அவரது குழந்தைக்கு எவ்வளவு வயதானாலும் தெரியாது. எவ்வளவு வளந்தாலும் தோனி தனக்கு குழந்தைதான் என்று கூறியுள்ளார்.

Dhoni

இந்த ஆண்டு ஜூலை ஏழாம் தேதி தோனிக்கு 39 வயது துவங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தோனிக்கு வயது அதிகரித்து கொண்டிருப்பதாலும், இந்திய அணி அடுத்த தோனிக்கான தேடலை துவங்கி விட்டதாலும் அவர் விரைவில் தனது ஓய்வை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement