வெளியானது நியூசிலாந்திற்கு எதிரான ஸ்குவாட். வருத்தத்தில் ஆழ்ந்த தோனி ரசிகர்கள் – விவரம் இதோ

dhoni
dhoni
- Advertisement -

இந்திய அணி இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரை வெற்றிகரமாக கைப்பற்றி தற்போது ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி நாளை 14 ஆம் தேதி பகலிரவு போட்டியாக நடைபெற உள்ளது.

ind vs sl

- Advertisement -

இந்நிலையில் தற்போது இந்த மாத இறுதியில் துவங்க இருக்கும் நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடருக்கான இந்திய அணியின் டி20 வீரர்கள் பட்டியல் நேற்று அறிவிக்கப்பட்டது. நீண்ட தொடரான இந்த தொடரில் இந்திய அணியில் தோனி மீண்டும் இடம் பிடிப்பார் என்று ரசிகர்கள் அதிக அளவில் எதிர்பார்த்திருந்தனர்.

ஆனால் இந்த தொடருக்கான அணியிலும் தோனி இடம் பெறவில்லை. இதனால் தோனி ரசிகர்கள் மிகுந்த வருத்தத்தில் ஆழ்ந்துள்ளனர். ஏனெனில் அக்டோபர் – நவம்பர் மாதம் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை தொடரில் இடம்பிடிக்க வரும் சில தொடர்களில் தோனி விளையாடவேண்டும் என்பது முக்கியம். அந்த வகையில் இந்த தொடரில் தோனி இடம்பிடிக்காததால் இனிவரும் தொடர்களிலும் அவரது வாய்ப்பு சந்தேகமாகியுள்ளது.

இறுதியாக வரவிருக்கும் ஐபிஎல் தொடரில் தோனி சிறப்பாக ஆடும் பட்சத்திலேயே அணியில் தேர்வாக வாய்ப்புள்ளது இல்லையெனில் அவர் உலக கோப்பையில் இடம் பெறுவதும் கேள்விக்குறிதான். இதனால் தோனியின் வருத்தத்துடனும், ஏமாற்றத்துடனும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement