நியூசி தொடருக்கான இந்திய அணி தேர்வு. தோனி ரசிகர்கள் குஷி – விவரம் இதோ

MSdhoni

இந்திய அணி தற்போது இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. அதனை தொடர்ந்து நாளை மறுதினம் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாட இருக்கிறது. ஆஸ்திரேலிய தொடர் முடிந்ததும் உடனடியாக இந்திய அணி நியூசிலாந்து செல்கிறது.

Dhoni-1

இந்நிலையில் இந்திய அணியின் நியூசிலாந்து தொடருக்காக பயணம் சற்று நீண்ட பயணம் என்பதால் வீரர்களின் தேர்வு அனைவரது கவனத்தையும் பெற்றுள்ளது. நியூசிலாந்து அணிக்கு எதிரான இந்த தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்படும் என்று தெரிகிறது. இந்த தொடருக்கான அணியில் தோனி ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான விடயம் காத்திருக்கிறது.

அதாவது இந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் தோனிக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று தெரிகிறது. ஒருநாள் போட்டிகளில் அவருக்கு வாய்ப்பு கிடைக்குமோ ? இல்லையோ ? ஆனால் டி20 யில் அவரது பெயர் பரிசீலனை செய்யப்படும் என்று தெரிகிறது. ஏனெனில் பண்ட் தொடர்ச்சியாக சொதப்பல், சாம்சன் வாய்ப்பு மறுப்பு என சில காரணங்களினால் மிடில் ஆர்டரில் பின்புறத்தில் ஒரு நிலையான பேட்ஸ்மேன் வேண்டும் என்ற காரணத்தினாலும் தோனியை தேர்வு செய்ய வாய்ப்பு உள்ளது.

Dhoni

அதனால் நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் அவருக்கு வாய்ப்பு நிச்சயம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் உலகக்கோப்பை நெருங்கி வருவதால் தோனிக்கு இந்த வாய்ப்பு கிடைத்தால் அவரது திறமையை நிரூபிக்க ஒரு சந்தர்ப்பமாக அமையும். எனவே இன்றைய தொடரில் தோனி தேர்வு செய்ய அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது. இந்த செய்தி ரசிகர்களிடையே பரபரப்பாக பேசப்பட்டு அதிக அளவு பகிரப்படும் வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -