ராணுவ பயிற்சிக்கு பின் மீண்டும் தனது மகளை சந்தித்த தோனி – வைரலாகும் புகைப்படம்

Ziva
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான தோனி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் இருந்து விலகி ராணுவ பயிற்சியினை விக்டர் படையுடன் சேர்ந்து மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து சுதந்திர தினம் அன்று லே பகுதியில் உள்ள பகுதியில் ராணுவ வீரர்களுடன் கொண்டாடினார்.

- Advertisement -

அதனை முடித்து அவர் ராணுவ வீரர்கள் மற்றும் ராணுவ பயிற்சி பள்ளி என அனைத்து இடங்களுக்கும் சென்று அவருடன் கலந்துரையாடினார். அதன் பின்னர் தற்போது தனது பயிற்சியை வெற்றிகரமாக முடித்த டோனி லே விமான நிலையத்தில் இருந்து தனது சொந்த ஊரான ராஞ்சிக்கு விமானம் மூலம் புறப்பட்டார்.

இந்நிலையில் தற்போது தோனி தனது மகளுடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. தோனிக்கு எந்த அளவு ரசிகர்கள் இருக்கிறார்களோ அந்த அளவிற்கு தோனியின் மகள் ஸிவா தோனிக்கும் உள்ளது குறிப்பிடத்தக்கது. தோனி எங்கு இருந்தாலும் அங்கு செல்லும் அவரது மகள் தோனியை நீண்ட நாட்களுக்கு பிறகு தற்போது சந்தித்துள்ளதால் இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement