தோனி ஓய்வு குறித்து யோசிக்குறாரா ? என்ன சொல்லறீங்க ? அவர் போகஸ் எல்லாம் இது ஒன்னுதான் – தோனி மேனேஜர் பேட்டி

Dhoni-1
- Advertisement -

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்தியாவில் துவங்க இருந்த பதிமூன்றாவது ஐபிஎல் சீசன் இதுவரை துவங்கவில்லை. மேலும் ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற இருந்த டி20 உலகக்கோப்பை குறித்த செய்தியும் இன்னும் தெளிவாக நமக்கு கிடைக்கவில்லை இதனால் தோனியின் ரசிகர்கள் மிகவும் கவலையில் இருக்கின்றனர்.

Dhoni

- Advertisement -

ஏனெனில் கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடருக்குப் பின்னர் தோனி இன்னும் களத்திற்கு திரும்பாததால் அவர் ஓய்வு முடிவை எடுத்துவிட்டாரோ என்று வருத்தத்தில் இருந்து வருகின்றனர். ஆனால் தொடர்ந்து பலரும் கூறி வந்தாலும் தோனி இதுவரை தனது ஓய்வு முடிவு குறித்து வாய் திறக்கவில்லை.

கடந்த ஆண்டு உலகக் கோப்பை தொடருக்குப் பின்னர் இதுவரை விளையாடாத தோனி தற்போது ஐபிஎல் போட்டிகளிலும் நடைபெறாததால் தான் தன்னுடைய வீட்டில் நேரத்தை செலவழித்து வருகிறார். மேலும் கடந்த சில வாரங்களாக விவசாயம் பார்த்து வருகிறார். இந்நிலையில் அவர் கிரிக்கெட்டில் இது ஓய்வு பெறுவது குறித்து தோனி நெருங்கிய நண்பரும் மேனேஜர் மிகில் திவாரகர் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

அதில் அவர் கூறியதாவது : நண்பர்களான நாங்கள் அவரின் கிரிக்கெட் குறித்தெல்லாம் பேசிக் கொள்வதில்லை. ஆனால் அவரைப் பார்க்கையில் அவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது பற்றி சற்றும் யோசிக்கவில்லை. மேலும் ஐபிஎல் போட்டிகளில் விளையாட அவர் ஆயுத்தமாக இருந்ததையும் நாம் பார்த்தோம்.

- Advertisement -

ஐ.பி.எல் தொடர் துவங்குவதற்கு ஒரு மாதத்திற்கு முன்னதாகவே சென்னையில் வந்து பயிற்சியை துவங்கியதும் நாம் பார்த்தோம். ஐபிஎல் குறித்து பிசிசிஐ பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது நிச்சயம் ஐபிஎல் நடந்தால் தோனி மீண்டும் களம் இறங்கி சிறப்பாக செயல்படுவார் நாடு முழுவதும் ஊரடங்கு அமல் படுத்தப் பட்ட இந்த நேரத்திலும் தோனி தன்னை மிகவும் பிட்டாக வைத்துள்ளார்.

நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள இந்த கொடிய கொரோனா நிலைமை மாறியதும் மீண்டும் அவர் பயிற்சிக்கு திரும்புவார் என்று தான் கருதுவதாக அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement