தமிழில் எனக்கு பிடித்த ஹீரோக்கள் என்றால் அது இவர்கள் இருவர் தான் – மனம்திறந்த தோனி

Dhoni
- Advertisement -

தல தோனி இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்து பல சாதனைகளை படைத்தவர். அதற்கும் மேலாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக இருந்து வருகிறார். இதன் காரணமாக தமிழகத்தில் மட்டுமின்றி இந்தியா முழுவதும் அவர் அவருக்கு பல கோடி ரசிகர்கள்

Dhoni-1

- Advertisement -

மேலும் ஐ.பி.எல் தொடருக்காக தொடர்ந்து சென்னை அணியில் விளையாடி வரும் அவர் தனது இரண்டாவது வீடு என்று அடிக்கடி கூறியுள்ளார். மேலும் தமிழ் திரைப்படங்களை அதிகம் விரும்பி பார்ப்பவர். அவர் தமிழ் நடிகர்களான விஜய், ரஜினி, அஜித், சூர்யா போன்ற அனைவரது திரைப்படங்களையும் சப்டைட்டிலுடன் பார்க்கும் வழக்கத்தினையும் வைத்துள்ளார்.

தமிழக மக்கள் மீது அவர் எப்பொழுதும் மரியாதை வைத்துள்ளதை அவர் பலமுறை கூறியுள்ளார். மேலும் தமிழக ரசிகர்களும் அவரை செல்லமாக அவரை தல என்று அழைப்பதும் நம் அறிந்ததே. இந்நிலையில் தனக்கு பிடித்த தமிழ் நடிகர்கள் யார் யார் என கூறியுள்ளார் தல தோனி. இவர் சமீபத்தில் கொடுத்த பேட்டியில்

Rajini

எனக்கு மிகவும் பிடித்த முதல் மூன்று நடிகர்களில், மூன்று இடத்தையும் ரஜினிக்கு தான் கொடுப்பேன். அதற்குப் பிறகு நான்காவதாக எனக்கு பிடித்த நடிகர் சூர்யா என்று கூறியுள்ளார் தோனி.

- Advertisement -

முன்னதாக கடந்த சில வருடங்களுக்கு முன்னர் சூர்யாவின் சிங்கம் படத்தை மிகவும் விரும்பி பார்த்ததாக தோனி கூறி இருந்தார். மேலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துவங்கிய போது அந்த அணிக்கு இரண்டு வருடங்களாக விளம்பர தூதராக இருந்தவர் நடிகர் தளபதி விஜய் என்பது குறிப்பிடத்தக்கது.

Surya

மேலும் ஏற்கனவே தான் ஒரு தீவிர ரஜினி ரசிகர் என்று கூறிவரும் தோனி அதற்கடுத்து சூர்யாவின் நடிப்பு பிடிக்கும் என்று கூறியுள்ளதால் சூர்யாவின் ரசிகர்கள் தோனியின் இந்த பேட்டியை ரசித்து பகிர்ந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement