ஐ.பி.எல் தொடருக்கு முன்னர் தோனி விளையாட இருக்கும் தொடர் இதுதானாம் – வெளியான தகவல்

Dhoni-1
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான தோனி இங்கிலாந்தில் நடந்து முடிந்த 50 ஓவர் உலக கோப்பை தொடருக்குப் பின் கிரிக்கெட் போட்டிகளில் இன்னும் பங்கேற்கவில்லை. அவர் வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்கா மற்றும் தற்போது நடந்து முடிந்த பங்களாதேஷ் ஆகிய அணிகளுக்கு எதிரான தொடரில் பங்கேற்கவில்லை.

dhoni

- Advertisement -

மேலும் தோனியை கடந்த சில தொடர்களாக இந்திய கிரிக்கெட் அணியின் நிர்வாகம் நிராகரித்து வருகிறது. இந்நிலையில் தோனி மீண்டும் இப்போது கிரிக்கெட்டில் களமிறங்குவார் என்று ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. மேலும் வாய்ப்புகள் தொடர்ந்து மறுக்கப்பட்டு வருவதால் அவரின் ஓய்வு அறிவிப்பை வெளியிட கட்டாயப்படுத்துகிறார்களோ என்ற எண்ணமும் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

இந்தச் சூழலில் கடந்த சில வாரங்களாகவே ஜார்கண்ட் மைதானத்தில் தோனி பயிற்சி செய்து வருவது போன்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வந்தன. எனவே அவர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் இடம் பெறுவார் என்றும் கூறப்பட்டது. ஆனால் தற்போது வெளியான இந்திய அணியின் பட்டியலில் மீண்டும் தோனி நிராகரிக்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் தோனி எப்போது விளையாடுகிறார் என்கிற முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

Dhoni

அதன்படி அடுத்த ஆண்டு மார்ச் மாதம் பங்களாதேஷில் ஆசிய லெவன் அணிக்கும், ரெஸ்ட் ஆஃப் த வேர்ல்ட் லெவன் அணிக்கும் 2 டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் ஆசிய அணி சார்பாக விளையாட இந்திய வீரர்கள் சிலரை விளையாட அனுமதிக்குமாறு பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் வேண்டுகோள் வைத்துள்ளது.

Dhoni 1

அதன்படி இந்திய வீரர்களான விராட் கோலி, தோனி, ரோகித் சர்மா, ஹார்டிக் பாண்டியா, புவனேஸ்வர் குமார், ரவீந்திர ஜடேஜா மற்றும் பும்ரா ஆகியோரை ஆசிய அணிக்காக விளையாட அனுமதிக்குமாறு பங்களாதேஷ் கிரிக்கெட் நிர்வாகம் பிசிசிஐ இடம் அனுமதி கேட்டுள்ளது. பிசிசிஐ இதற்கு அனுமதி அளிக்கும் பட்சத்தில் தோனி ஐபிஎல் போட்டிகளுக்கு முன்பாக இந்த மிகப்பெரிய தொடரில் விளையாட வாய்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement