தோனி இந்த தொடர்தான் கடைசி தொடர். அதன்பின் அவருக்கு வாய்ப்பு வழங்க மாட்டோம் – பி.சி.சி.ஐ அதிரடி

Dhoni
- Advertisement -

இந்திய அணி நடப்பு உலகக் கோப்பை தொடரில் அரையிறுதிப் போட்டியில் தோல்வி அடைந்து உலக கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது. அடுத்து இந்திய அணி மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் கலந்து கொண்டு 3 டி20, 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.

Dhoni 1

- Advertisement -

இந்த தொடருக்கான இந்திய அணி நாளை அறிவிக்கப்பட உள்ள நிலையில் இந்திய அணியில் தோனி இடம்பெற மாட்டார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. உலக கோப்பை தொடரில் தோனியின் மெதுவான ஆட்டம் விமர்சனத்துக்கு உள்ளானது. மேலும் தோனி ஓய்வு பெறவேண்டும் என்றும் பலரும் அவரை வற்புறுத்தி வருவதாக தெரிகிறது.

இதனால் விரைவில் தோனி ஓய்வு முடிவை அறிவிப்பார் என்றும் செய்திகள் வெளியாகின. ஆனால் தோனியிடம் இருந்து எந்த ஒரு தகவலும் இதுவரை வெளியாகவில்லை. பிசிசிஐ தோனியை நல்ல வழி அனுப்புதலோடு விடைபெற வைக்க திட்டம் வைத்துள்ளது. அதன்படி பங்களாதேஷில் நடைபெறும் முத்தரப்பு ஒருநாள் தொடரில் இந்திய அணியில் தோனிக்கு வாய்ப்பு கொடுக்க உள்ளது.

dhoni

நவம்பர் மாதம் நடக்கும் இந்த முத்தரப்பு தொடர் தான் தோனிக்கு கடைசி தொடர் என்று பிசிசிஐ வட்டார தகவல்கள் உறுதியாக தெரிவிக்கின்றனர். அதன்பின் அவருக்கு அணியில் வாய்ப்பு கொடுக்கப்பட மாட்டாது. எனவே அவரே முன்வந்து ஓய்வு முடிவை அறிவிக்க வேண்டும் என்று தோனி மீது பி.சி.சி.ஐ அழுத்தம் கொடுப்பதாக தெரிகிறது.

Advertisement