இதே நாள் 2 ஆண்டுகளுக்கு முன்பு. தோனியின் கேரியரை முடித்துவைத்த போட்டி – தோனி என்ற சகாப்தம் முடிந்த நாள்

Dhoni-2
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி சர்வதேச கிரிக்கெட்டில் கடைசியாக விளையாடிய ஒருநாள் போட்டி ஜூலை 9-ஆம் தேதி 2019 இதே நாளில் தான். இந்திய கிரிக்கெட் அணியின் தீவிர ரசிகராக நீங்கள் இருப்பீர்கள் என்றால் நிச்சயம் இந்த போட்டி உங்கள் மனதில் ஒரு நீங்காத இடம் பிடித்திருக்கும். 2011ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பையை வென்ற தோனியை எப்படியாவது இந்த 2019ஆம் ஆண்டு உலகக் கோப்பை வெற்றியுடன் வழியனுப்ப நினைத்து இந்திய அணி இந்த தொடரில் விளையாடியது. லீக் சுற்று முதல் சிறப்பாக விளையாடி வந்த இந்திய அணி அரையிறுதிப் போட்டிக்கு முன்பு ஒரே ஒரு போட்டியில் மட்டுமே தோற்றிருந்தது.

dhoni

- Advertisement -

இதன் காரணமாக நியூசிலாந்து அணிக்கு எதிரான இந்த அரையிறுதி போட்டியில் வெற்றி பெற்று நிச்சயம் இந்திய அணி இறுதிப் போட்டியிலும் ஜெயித்து உலகக் கோப்பையுடன் தோனியை வழியனுப்ப நினைத்தது. ஆனால் ஜூலை எட்டாம் தேதி நடைபெற்ற அரையிறுதிப் போட்டி மழை காரணமாக பாதிக்கப்பட நியூசிலாந்து அணி நிர்ணயித்த 240 ரன்களை ஜூலை 9 ஆம் தேதி துரத்த துவங்கியது இந்திய அணி. இந்த ஜூலை 9-ஆம் தேதி இந்திய அணி ஆரம்பம் முதலே தடுமாற 96 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

ஒருவழியாக பின்னர் ஜடேஜா மற்றும் தோனி ஆகியோர் சிறப்பாக விளையாடி 116 ரன்கள் பாட்னர்ஷிப் அமைக்க கடைசி 2 ஓவர்களில் 31 ரன்கள் தேவைப்பட்டது. தோனி களத்தில் இருப்பதால் எப்படியும் இந்தியா ஜெயிக்கும் என்று நாம் அனைவரும் நினைத்திருப்போம். ஆனால் அந்த 49 ஓவரின் முதல் பந்தில் சிக்சர் அடித்த தோனி 3-வது பந்தில் 2 ரன்களை எடுக்க முயற்சிக்க சரியான த்ரோ செய்து தோனியை குப்தில் ரன் அவுட் ஆக்கினார். அந்த இரண்டு இன்ச் இடைவெளியில் உலகக்கோப்பை கனவும் கலைந்து போனது தோனியும் அழுதுகொண்டே வெளியேறினார்.

Dhoni

இந்த ரன்அவுட் தோனியை மட்டுமல்ல இந்திய அணி வீரர்கள் மற்றும் ஊழியர்கள் அவர்களையும் தாண்டி இந்தியாவில் இருந்த ஒட்டுமொத்த ரசிகர்கள் என அனைவரையும் கண் கலங்க வைத்தது என்று கூறலாம். இந்த போட்டி முடிந்து பேட்டியளித்த தோனி கூட அந்த இரண்டு இன்ச் இடைவெளியை கடக்க நான் நிச்சயம் டைவ் அடித்திருக்க வேண்டும். அதனை நினைத்து நான் பல நாட்கள் தூங்காமல் இருந்து உள்ளேன் என்று கூறியிருந்தார். அப்படி 2 இன்ச் கேப்பில் கோப்பையை நழுவு விட்டது மட்டுமின்றி தோனி என்ற மிகப்பெரிய சகாப்தத்தையும் இந்திய அணி இழந்த தினம் இன்றுதான்.

Rohith

ஆம் உலக கோப்பை தொடரை தொடர்ந்து அடுத்து வந்த தொடர்களில் தோனியின் பெயர் பரிசீலனை செய்யப்படாத நிலையில் தானாக முன் வந்து திடீரென 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 தனது ஓய்வு முடிவை அறிவித்து ரசிகர்களை சோகக் கடலில் ஆழ்த்தினார் தோனி. ஆனால் தோனியின் கடைசி போட்டி இந்த அரையிறுதிப் போட்டி தான் என்று யாரும் நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டார்கள். அப்படி தோனி கடைசியாக தனது கிரிக்கெட் வாழ்வை முடித்துக் கொண்ட நாள் இந்த ஜூலை 9. இந்த அரையிறுதி போட்டி குறித்து உங்களுக்கு ஏதேனும் நினைவு இருப்பின் அதை கமென்ட் செக்ஷனில் பகிரவும் நண்பர்களே.

Advertisement