தோனி மட்டுமல்ல அவரோடு சேர்ந்து இவங்க 2 பேருக்கும் இந்திய அணியில் வாய்ப்பு இல்லையாம் – விவரம் இதோ

Dhoni

இந்தாண்டு இறுதியில் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் டி20 உலகக் கோப்பை நடைபெற உள்ளது. ஆனால் தற்போது உலகமெங்கும் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக இந்த தொடர் நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

dhoni with pant

மேலும் ஐபிஎல் தொடரும் தற்போது நடைபெற வாய்ப்பு இல்லை என்றே தெரிகிறது. அப்படி ஐபிஎல் தொடர் திட்டமிட்டபடி நடைபெற வில்லை என்றால் இந்திய அணியின் வீரர்களான 3 பேருக்கு இந்திய அணியின் வாய்ப்பு கனவாகவே மாறிவிடும்.

அந்த வரிசையில் முதலில் தோனி இருக்கிறார். இங்கிலாந்தில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை தொடருக்குப் பின்னர் இந்திய அணியில் விளையாடாத தோனி ஐபிஎல் தொடரில் தனது திறமையை நிரூபிப்பதன் மூலம் இந்திய t20 அணியில் இடம் பிடிக்கலாம் என்று நினைத்தார்.

ஆனால் தற்போது ஐபிஎல் நடைபெறாவிட்டால் அவரது இடம் கேள்விக்குறிதான் மேலும் ராகுல் பேட்டிங் மற்றும் கீப்பிங் ஆகியவற்றை சிறப்பாக செய்து வருவதால் அவரையே முதன்மையாக வைத்து இந்திய அணி களமிறங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு அடுத்து இளம் வீரர்களான சஞ்சு சாம்சன் மற்றும் க்ருனால் பாண்டியா ஆகியோரும் தங்களது வாய்ப்பை இழக்க உள்ளனர்.

- Advertisement -

ஏனெனில் அவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை எனவே இந்த ஐபிஎல் தொடரில் அவர்கள் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியில் இடம் பெறலாம் என்று நினைத்திருந்தார்கள். மேலும் தேர்வு குழுவினரும் அவர்களுக்கு ஒரு வாய்ப்பாக இந்த ஐபிஎல் தொடரை கருதினர்.

Samson

krunal 2

ஆனால் தற்போது ஐபிஎல் நடைபெறவில்லை என்றால் ஏற்கனவே தயாராகியுள்ள இந்திய அணியே டி20 உலக கோப்பையில் பங்கேற்கும் அதுவும் அந்த தொடர் நடைபெறும் பட்சத்தில் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் தோனியுடன் சேர்ந்து க்ருனால் பாண்டியா மற்றும் சாம்சன் ஆகியோரும் இந்திய அணியின் வாய்ப்பை இழக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.