தோனிக்கு இந்தியாவின் உயரிய விருதான இதனை வழங்கி கவுரவிக்க வேண்டும் – காங்கிரஸ் எம்.எல்.ஏ கோரிக்கை

Dhoni world cup
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், முன்னணி வீரராக திகழ்ந்த தோனி இந்திய கிரிக்கெட் அணிக்காக 2004 ஆம் ஆண்டு அறிமுகமாகி சுமார் 16 ஆண்டுகளாக விளையாடி 90 டெஸ்ட் போட்டிகளிலும், 350 ஒருநாள் போட்டிகளிலும், 98 டி20 போட்டிகளிலும் இந்திய அணிக்காக விளையாடி விளையாடி உள்ளார். இந்நிலையில் தற்போது கடந்த ஓராண்டாக இந்திய அணியில் இடம் கிடைக்காமல் இருந்த டோனி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக நேற்று முன்தினம் அறிவித்திருந்தார்.

dhoni

- Advertisement -

அவரது இந்த திடீர் ஓய்வு அறிவிப்பினால் ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள், சக அணி வீரர்கள் என அனைவரும் வருத்தத்தில் ஆழ்ந்தனர். மேலும் தோனியின் இந்த முடிவுக்கு கிரிக்கெட் வீரர்கள், சினிமா பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள், தீவிர ரசிகர்கள் என அனைவரும் தங்களது வாழ்த்துகளை கூறி பிரியாவிடை கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் மத்திய பிரதேசம் மாநிலம் போபால் மாநகரின் காங்கிரஸ் சட்டப் பேரவை உறுப்பினரான பி.சி.சர்மா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் “மகேந்திர சிங் தோனி இந்த நாட்டில் விலை மதிப்பு இல்லாத பொக்கிஷம்”. அவர் இந்தியாவின் வெற்றியை அனைத்து நாடுகளிலும் நிலை நாட்டி இருக்கிறார்.

அவருக்கு இந்தியாவின் உயரிய விருதான “பாரத ரத்னா” விருது வழங்கி தோனியை கவுரவிக்க வேண்டும். மேலும் இந்திய கிரிக்கெட்டின் பெயரை உச்சத்துக்குக் கொண்டு சென்ற அவருக்கு நாட்டின் உயரிய விருது வழங்குவதில் எந்த தவறும் இல்லை என பி.சி.சர்மா கூறியது குறிப்பிடத்தக்கது.

MSdhoni

அவரின் இந்த கருத்திற்கு ரசிகர்களும் தங்களது ஆதரவை தெரிவித்து வருகிறார்கள். தோனிக்கு இந்த உயரிய விருதினை கண்டிப்பாக வழங்க வேண்டும் என்றும் அவர் இந்த விருதுக்கு தகுதியான நபர் என்றும் ரசிகர்கள் இந்த பதிவை வைரல் ஆக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement