MS Dhoni : தோனி ஒரு தீவிரவாதி என்று கூறிய தோனியின் நெருங்கிய நண்பர் – விவரம் இதோ

இந்திய அணியின் முன்னணி கேப்டன் தோனி இந்திய அணிக்காக 50 ஓவர் உலக கோப்பை, 20 ஓவர் உலக கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் கோப்பை என அனைத்து வகையான ஐ.சி.சி. கோப்பை

dhonidecision
- Advertisement -

இந்திய அணியின் முன்னணி கேப்டன் தோனி இந்திய அணிக்காக 50 ஓவர் உலக கோப்பை, 20 ஓவர் உலக கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் கோப்பை என அனைத்து வகையான ஐ.சி.சி. கோப்பைகளையும் இந்திய அணிக்காக பெற்று தந்த ஒரே கேப்டன் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

dhoni1

- Advertisement -

இந்திய அணியின் நட்சத்திர வீரரான தோனி பல சாதனைகளை புரிந்துள்ளது நமக்குத் தெரியும். ஆனால், அவருடன் இளம் வயதில் 2000 ஆவது ஆண்டுவாக்கில் விளையாடிய தோனியின் நெருங்கிய நண்பர் சத்யபிரகாஷ் தோனி குறித்த ஒரு சுவாரஸ்யமான தகவல் ஒன்று தற்போது வெளியிட்டுள்ளார்.

அதன்படி தோனி அவர்களுடன் விளையாடும்போது அவர்கள் தோனியை தீவிரவாதி என்று அழைப்பார்களாம். அதற்கு காரணம் எப்போது தோனி பேட்டிங் செய்ய களத்திற்கு வந்தாலும் 20 பந்துகளை சந்தித்த ஆள் 40 முதல் 50 ரன்கள் என்று அடித்து மிரள வைப்பாராம். ஆகையால் இதுபோன்ற வெடித்து சிதறும் ஆட்டத்தை வெளிப்படுத்துவதால் தோனியை தீவிரவாதி என்று அவர்கள் அழைப்பார்களாம்.

MSdhoni

மேலும் எப்பொழுதும் அணியில் உள்ள எந்த வீரர் எந்த விடயத்தை விளையாட்டின் நடுவே கூறினாலும் அதனை நின்று காது கொடுத்து கேட்பாராம். மேலும் அப்போதெல்லாம் தோனி கேப்டனாக ஒருசில போட்டியிலேயே செயல்படுவார் அவர் கேப்டனாக இருக்கும் பொழுதும் இந்தி மொழியிலேயே பேசுவார். தற்போது ஆங்கிலத்தில் சரளமாக பேசுகிறார் இந்திய அணியை பலகாலம் வழிநடத்தியும் வந்துவிட்டார். என்று சுவாரஸ்யமான நிகழ்வினை தோனியின் நண்பர் சத்திய பிரகாஷ் பகிர்ந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement