தோனி செய்த தரமான சம்பவங்கள். மனசுல பட்டா உடனே பண்ணும் குணமுடைய தல – விவரம் இதோ

Dhoni
- Advertisement -

இந்திய கிரிக்கெட் வரலாறு எப்போதும் 2000க்கு முன் 2000க்கு பின் என்றுதான் எழுதலாம். 2000ஆம் ஆண்டின் முற்பாதியில் கங்குலி, தோனி, விராட் கோலி என பல கேப்டன்கள் இந்திய அணியை வழிநடத்தி இருக்கிறார்கள். அதில் தோனி மிகவும் முக்கியமானவர். இவரின் பங்கு தான் இந்திய கிரிக்கெட்டில் மிகவும் அதிகம்.

- Advertisement -

வீரர்களை வைத்து என்ன செய்ய வேண்டுமோ அதனை கனகச்சிதமாக செய்வார். பந்துவீச்சு பெரிதாக இல்லாத அணியை வைத்து உலக கோப்பை தொடர்களில் வெல்வார். அப்படிப்பட்ட தோனி நாம் நினைத்ததை எப்போதும் செய்யமாட்டார். அவருக்கு தோன்றியதை மட்டுமே செய்து சாதித்தவர். அவர் நாம் ஒன்று நினைத்துக் கொண்டிருப்போம், ஆனால் தோனி அதற்கு நேர் மாறாக ஒரு விஷயத்தை நினைத்து சாதித்து விடுவார். இப்படி அவர் செய்த மூன்று தரமான சம்பவங்களை பற்றி பார்ப்போம்.

2011 உலக கோப்பை :

இந்த உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணிக்கு 275 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 114 ரன்கள் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்தது. அப்போது யுவராஜ்சிங் இறங்கியிருக்க வேண்டும். ஆனால் அதற்கு மாறாக திடீரென்று தோனி களமிறங்கினார் களமிறங்கியது மட்டுமல்லாமல் அனைவரும் வாயை பிளக்கும் வகையில் வெற்றியையும் தேடிக் கொடுத்தார்.

- Advertisement -

2011-final
.
சாம்பியன்ஸ் கோப்பை 2013 :

சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் 18 பந்துகளில் 27 ரன்கள் எடுத்தால் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று விடும். அப்போது இஷாந்த் ஷர்மா தொடர்ந்து ரன்களை வாரி வழங்கிக் கொண்டிருந்தார். அவர் மீது நம்பிக்கை வைத்து தனக்கு தோன்றியதை வைத்து, திடீரென்று இசாந்த் சர்மாவிற்கு 17வது ஓவரை கொடுத்தார். அப்போது அசத்தலாக அவர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு காரணமாக இருந்தார்.

Dhoni

டி20 உலகக் கோப்பை 2016 :

பொதுவாக விக்கெட் கீப்பர்கள் எப்போதும் இரண்டு கையுறைகளை அணிந்து கொள்வார்கள். ஆனால் தோனி எப்போதும் அதற்கு நேர்மாறாக இருப்பார். உள்ளூரில் நாம் விளையாடுவது போன்று நேரத்திற்குத் தகுந்தாற்போல் தன்னை மாற்றிக்கொள்வார். ‘’ஸ்ட்ரீட் ஸ்மார்ட்’’ எனப்படும் வித்தையை அற்புதமாக கற்றவர் தோனி. கடைசிப் பந்தில் எப்படியும் ரன் அவுட் ஆகும் என்று தெரியும். இதன் காரணமாக ஒரு கையுறையை கழட்டிவிட்டு கீப்பராக நின்றார். அதேபோல் அந்த ஒற்றைக் கையில் பந்தை பிடித்து வேகமாக வந்து ரன் அவுட் செய்து அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றார் தோனி.

Advertisement