ஆகஸ்ட் 15 ஆம் தேதி தோனியின் திட்டம் இதுதான் – விக்டர் படை அதிகாரி வெளியிட்ட புதுதகவல்

Dhoni
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான தோனி மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் இருந்து விலகி இந்திய ராணுவத்தில் பயிற்சி பெற அனுமதி கேட்டிருந்தார். இந்த அனுமதியினை இந்திய ராணுவம் தோனிக்கு அளித்தது.

Dhoni

அதனைத் தொடர்ந்து இரண்டு மாத பயிற்சி காலத்தில் இணைந்து தோனி அடுத்த 31ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 15-ஆம் தேதி வரை இந்திய ராணுவத்தில் பயிற்சி பெற அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து தோனி தனது பயிற்சியினை இன்று தொடங்கி உள்ளார்.

- Advertisement -

இந்நிலையில் தோனி இந்திய ராணுவத்துடன் இணைந்ததையும் காஷ்மீர் அடைந்து 106 ஆர்மி பட்டாலியனுடன் இணைந்து செயல்பட போவதையும் தோனியின் சக அதிகாரி ஒருவர் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி நடக்கும் சுதந்திர தின பரோலில் தோனி கலந்து கொண்டு அந்த விழாவில் ராணுவ வீரர்களிடம் ராணுவ நடை செய்யவும் இருக்கிறார் என்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவை கண்டா தோனி ரசிகர்கள் சுதந்திர தின நிகழ்ச்சியில் தோனி ராணுவ வீரர்களுடன் இணைந்து ராணுவ நடையை கம்பீரமாக நடக்க உள்ளதை பார்க்க நாங்கள் ஆவலாக உள்ளோம் என்று பதிவிட்டு வருகின்றனர்.

Advertisement