சதம் அடித்த ராகுலின் கொண்டத்தை CUTE REACTION கொடுத்து பாராட்டிய தோனி ..! – வைரலாகும் வீடியோ

இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகளில் ,3 ஒருநாள் போட்டி, மூன்று டி20 போட்டிகளில் விளையாட இங்கிலாந்து சென்றுள்ளது. இந்நிலையில் இந்த தொடரின் முதல் டி20 போட்டியில் இந்திய அணி குல்தீப் யாதவ் பந்துவீச்சாலும் கே எல் ராகுலின் அதிரடி சதத்தாலும் வெற்றி பெற்று மூன்று போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
india
நேற்று (ஜூன் 3) மாஞ்சிஸ்டரில் உள்ள ஓல்ட் ட்ராட்போர்ட் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் பீல்டிங்கை தேர்வு செய்தது. பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணி நிர்ணயித்த 160 ரன்கள் என்ற இலக்கை 18.2 ஓவர்களில் அடித்து இந்திய அணி வெற்றி பெற்றது.

இந்திய அணியில் அதிரடியாக விளையாடியா கே எல் ராகுல் 54 பந்துகளில் 101 ரன்களை குவித்தார்.அதில் 10 பவுண்டரி ,மற்றும் 5 சிக்ஸ்களும் அடங்கும். இந்த போட்டியில் 18 வது ஓவரில் தனது சதத்தை பூர்த்தி செய்த கே எல் ராகுல் சதமடித்த மகிழ்ச்சியில் ஆக்ரோஷமாக துள்ளி குதித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இதனை ட்ரெஸ்ஸிங் ரூமில் இருந்து பாராட்டிய தோனியின் ரியாக்ஷன் அடங்கிய வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.