தோனி வீட்டு தீபாவளி. எப்படி மின்னுதுன்னு பாருங்க – வைரலாகும் தோனி தீபாவளி வீடியோ

Ziva
- Advertisement -

இந்திய அணியின் முன்னணி வீரரான தோனிக்கு எவ்வளவு ரசிகர் பட்டாளம் இருக்கின்றதோ அதே அளவிற்கு தோனியின் மகளான ஜிவா தோனிக்கும் அதே அளவிற்கு ரசிகர்கள் பட்டாளம் இருக்கத்தான் செய்கிறது. மேலும் ஜிவா தோனி செய்யும் ஒவ்வொரு விஷயமும் இணையத்தில் ஹிட் அடிக்க தவறியதில்லை.

- Advertisement -

இந்நிலையில் நேற்று தீபாவளி பண்டிகை இந்தியா முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்திய அணியின் முன்னணி வீரரான தோனி அவரும் தனது வீட்டில் தீபாவளி கொண்டாட்டத்தை சிறப்பித்தார். தோனியின் வீடு முழுவதும் வண்ண விளக்குகள் மின்ன அவரது மகள் ஜிவா தோனி வீட்டின் வெளியே இருப்பது போன்ற ஒரு வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவில் தீபாவளி காரணமாக தோனியின் வீடு முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருக்க அவரது மகள் தீபாவளி வாழ்த்துக்களை தெரிவிக்கிறார். இந்த வீடியோ தற்போது தோனி ரசிகர்களால் இணையத்தில் வைரலாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement