MS Dhoni : சிக்சருடன் சதமடித்து மாஸ் காட்டிய தல தோனி – விவரம் இதோ

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருந்த உலகக்கோப்பை தொடர் நாளை மறுதினம் 30 ஆம் தேதி துவங்கி, ஜூலை 14 ஆம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில்

Dhoni
- Advertisement -

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருந்த உலகக்கோப்பை தொடர் நாளை மறுதினம் 30 ஆம் தேதி துவங்கி, ஜூலை 14 ஆம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் உலககோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான அனைத்து அணிகளும் தயாராக உள்ளன. இந்த தொடரில் மொத்தம் 48 போட்டிகள் நடைபெற உள்ளன.

india

- Advertisement -

இந்நிலையில் இந்திய அணி பங்களாதேஷ் அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் இன்று கலந்து கொண்டு விளையாடி வருகிறது. இந்த போட்டியில் பங்களாதேஷ் அணி டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதனை தொடர்ந்து இந்திய அணி பேட்டிங்கை தொடங்கியது இந்த போட்டியில் துவக்க வீரர்களாக ரோகித் சர்மா 19 ரன்களிலும் தவான் ஒரு ரன்னிலும் அவுட் ஆகி ஏமாற்றினர்.

அடுத்து வந்த விராத் கோலி 47 ரன்கள் அடித்து ஓரளவுக்கு ஆறுதல் அளித்தார். அதன் பின்னர் ராகுல் சிறப்பாக விளையாடி 99 பந்துகளில் 108 ரன்கள் குவித்தார். இந்த பயிற்சி போட்டியில் விஜய்சங்கர் 2 ரன்கள் எடுத்து சோபிக்க தவறினார். பின்னர் தோனி அதிரடியாக ஆடி 78 பந்துகளில் 113 ரன்கள் குவித்தார். இதில் குறிப்பிட வேண்டிய விடயம் என்னவென்றால் தோனி 99 ரன்கள் எடுத்திருந்தபோது சிக்ஸர் அடித்து தனது சதத்தை பதிவு செய்தார்.

Dhoni 1

மேலும் இந்த 113 ரன்களில் சிறப்பான விடயம் என்னவென்றால் இதில் 8 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்சர்களை விளாசினார். தோனி மற்றும் ராகுல் இந்த போட்டியில் சதமடித்து தங்களது ஆட்டத்தின் திறனை இந்த போட்டியின் மூலம் காண்பித்தனர். முடிவில் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழந்து 359 ரன்களை குவித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement