தோனி கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதை மறைத்த தோனி – காரணம் இதுதான்

Dhoni-1

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான மகேந்திர சிங் தோனி தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் இருந்து விலகி காஷ்மீர் பகுதியில் ராணுவ வீரர்களுடன் சேர்ந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். அவருடைய பயிற்சி ஆகஸ்ட் 15ம் தேதி நிறைவடைகிறது.

Dhoni

தோனி உலக கோப்பை போட்டியின்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக பேட்டிங் செய்யும்போது கையில் அடிப்பட்டது. அப்போது அவர் ரத்தம் துப்பிய ஒரு புகைப்படம் இணையத்தில் வைரல் ஆனது. அதன் காரணத்தை இதுவரை அவர் வெளியில் சொல்லவில்லை மேலும் அவருக்கு கையில் அடிபட்ட விடயத்தை பெரிதாக அவர் வெளியில் சொல்லாமல் ரகசியமாக வைத்திருந்தார்.

அப்படி அவர் எலும்பு முறிவை ரகசியமாக வைக்க காரணம் யாதெனில் தோனி உலகக் கோப்பை தொடரின் போதே அவர் ராணுவ பயிற்சியில் ஈடுபடுவதற்கு அனுமதி கேட்டிருந்தார். அதனால் அந்த எலும்பு முறிவு வெளியில் தெரிந்தால் ராணுவ பயிற்சிகள் அனுமதிக்க மாட்டார்கள் என்று அவர் மறைத்துள்ளார். இந்த எலும்பு முறிவு பிரச்சனை அவரோட பயிற்சிக்கு தடையாக இருக்கும் என்ற காரணத்தால் அவர் அதனை மறைத்து அனுமதியும் பெற்று விட்டார்.

Dhoni1

தோனியின் இந்த அர்ப்பணிப்பு தற்போது தகவளாக வெளியாகி உள்ளது ராணுவத்தின் மீது அவர் கொண்ட ஈடுபாடு அவரை அவ்வாறு ரகசியமாக அந்த தகவலை வைத்து தற்போது பயிற்சியை முடிக்கும் நிலையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. ரசிகர்கள் தற்போது இந்த செய்தியை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றார் அவரின் அர்ப்பணிப்பும் ஈடுபாடும் ஈடுயிணை இல்லாதது என்றும் கருத்துக்களை பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -