தோனியின் ஹெல்மெட்டில் எதற்காக தேசியக்கொடி பொறிக்கப்பட்டுள்ளது தெரியுமா ?

கிரிக்கெட் வரலாற்றில் மிகச்சிறந்த வீரர்களை விரல்விட்டு எண்ணி விடலாம்.

அவர்களில் மிகமிக முக்கியமானவர் நம் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் இந்நாள் வீரருமான தோனி.

dhoni

அணியின் இக்கட்டான சூழ்நிலைகளில் முன்னின்று சிறப்பாக வழிநடத்தி வெற்றியை கைப்பற்ற காரணமாக இன்றுவரை இருந்து வரும் தோனி மிகச்சிறந்த விக்கெட் கீப்பர் என்பதை நாம் அறிந்ததே.

கடைசியாக தென்ஆப்பிரிக்காவில் நடந்த தொடரில் கூட நமது இளம் ஸ்பின்னர்களுக்கு ஸ்டம்பின் பின்னிருந்து எப்படி செயல்படவேண்டுமென்று சைகை செய்து ஸ்பின்னர்கள் விக்கெட் வீழ்த்திட பெரிதும் உதவினார்.

dhoni

- Advertisement -

இவ்வளவு திறமையான விக்கெட் கீப்பரான தோனியின் ஹெல்மெட்டை கவனித்தால் அதில் தேசியக்கொடி பொறிக்கப்படாமல் தவிர்க்க பட்டிருக்கும். அதற்கான காரணம் என்னவென்று தற்போது வெளியாகியுள்ளது.

dhoni

அந்த காரணம் என்னவென்று தெரிந்தால் இன்னமும் தோனி மீதுள்ள மரியாதை ஒருபடி மேலே அதிகரிக்கும்.

காரணம் இதுதான் :

நாட்டின் தேசியக்கொடியை அலட்சியப்படுத்துவதோ அல்லது முறையின்றி கீழே வைப்பதோ நாம் கொடியை அவமதிப்பதற்கு நிகரான செயல்.

dhoni

சிலநேரங்களில் பவுலர்களுக்கு ஏற்றாற்போல ஹெல்மெட்டை மாட்டுவதும் பின்னர் கழட்டி தங்களுக்கு பின்புறமாக மைதானத்தில் வைப்பது வழக்கம். தேசியக்கொடி பொருத்திய ஹெல்மெட்டை அப்படி கீழே வைத்து கொடியை அவமதித்திட கூடாதென்று தான் தோனி தன்னுடைய ஹெல்மெட்டில் தேசியக்கொடி பொறிப்பதை தவிர்த்தாராம்.

இந்த காரணம் தெரிந்தவுடன் இப்போது உங்களுக்கும் தோனி மீதான மரியாதை ஒருபடி உயர்ந்திருக்குமே ! அதுதான் தோனி.