பிறந்தநாள் அன்று தோனியிடம் திட்டுவாங்கிய மனிஷ் பாண்டே – சுவாரசிய தகவல் இதோ

Pandey-1

இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் மனிஷ் பாண்டே இன்று தனது 30வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். கர்நாடக மாநிலத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரரான மணீஷ் பாண்டே விராட் கோலி தலைமையிலான அண்டர் 19 அணியில் விளையாடியவர் என்பதும் 2009 ஆம் ஆண்டு மலேசியாவில் நடைபெற்ற அண்டர் 19 உலககோப்பையில் இந்திய அணிக்காக பங்கேற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Pandey

மணிஷ் பாண்டே பிறந்த நாளான இன்று தோனியிடம் திட்டு வாங்கிய ஒரு சுவாரஸ்யமான நிகழ்வு குறித்த பதிவு தான் இது. இந்திய அணி தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 போட்டி ஒன்றில் பங்கேற்று விளையாடியது. அந்தப் போட்டியில் இந்திய அணி 10.4 ஒரு 90 ரன்கள் குவித்து 4 விக்கெட்டுகள் இழந்திருந்தது. அப்பொழுது தோனியுடன் இணைந்து பாண்டே ரன் குவிப்பில் ஈடுபட்டார்.

இறுதியில் 188 ரன்கள் குவித்தது இந்திய அணி. இவர்கள் இருவரும் சேர்ந்து 98 ரன்கள் ஆட்டமிழக்காமல் அடித்தனர். தோனி 52 ரன்களும், பாண்டே 79 ரன்கள் குவித்து அசத்தினார்கள். இந்த போட்டியின் இடையே தோனி பந்தை தட்டி விட்டு இரண்டாவது ரன்னுக்கு ஓடிவரும்போது பாண்டே மைதானத்தின் நடுவே எதையோ யோசித்தபடி நின்றார். இதனை கண்ட தோனி தனது நிதானத்தை இழந்து அவரை ஹிந்தியில் திட்டிவிட்டார்.

Pandey 2

வழக்கமாக களத்தில் அவ்வளவு ஆக்ரோஷத்தை காட்டாமல் எப்போதும் கூலாக இருக்கும் டோனி அப்போது மிகுந்த கோபத்துடன் கத்தினார். அந்த சம்பவம் அப்போது பரபரப்பாக பேசப்பட்டது எனவேதான் பிறந்த நாளான இன்று அந்த சம்பவத்தை நினைவு கொள்வதற்காகவே இந்த பதிவினை பதிவிட்டு இருக்கிறோம்.