இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான தோனி உலகக்கோப்பைக்கு பின்பு ஓய்வை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் இன்று வரை ஓய்வு பற்றிய எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. மேலும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் இருந்து விலகிய தோனிக்கு தற்போது நடைபெறும் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான தொடர வாய்ப்பு கிடைக்கவில்லை.
இந்நிலையில் தற்போது தோனி தனது சொந்தஊரான ராஞ்சியில் கிரிக்கெட் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். மேலும் அவர் தற்போது பாலிவுட் படம் ஒன்றில் கௌரவ தோற்றத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாலிவுட்டின் முன்னணி கதாநாயகனாக சஞ்சய்தத் நடிக்கும் படத்தில் தோனி அவருடன் நடிக்க உள்ளார் என்று கூராடுகிறது. படக்குழுவினரிடம் இருந்து வெளிவந்த தகவலின்படி இந்த புதிய படத்தின் பெயர் டாக்ஹவுஸ் என்றும் அதில் சஞ்சய்தத் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் மேலும் அவருடன் இணைந்து தோனியும் கௌரவ தோற்றத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்த படத்தை சமீர் கார்னிக் இயக்க உள்ளார். இந்தப் படத்தில் தோனி நடிக்க உள்ளார். தோனிக்கு கிரிக்கெட் வாழ்க்கை முடிந்து அடுத்த எதிர்காலம் என்ன என்பது தெரியாமல் இருந்த நிலையில் தற்போது அவர் பாலிவுட் சினிமாவில் அறிமுகமாக இருப்பது அனைவருக்கும் ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.