தோனிக்கு ராணுவத்தில் முதல் டியூட்டி இதுதான் – தோனிக்கு ஆர்டர் போட்ட இந்திய ராணுவம்

Dhoni

இந்திய கிரிக்கெட்டின் முன்னணி வீரரான தோனி. இந்திய ராணுவத்தில் கௌரவ லெப்டினன்ட் கர்னல் பதவியில் இருக்கிறார். அவ்வப்போது ராணுவ வீரர்களுடன் உரையாடும் தோனி ராணுவ குழுவுடன் சேர்ந்து பயிற்சி மேற்கொள்ள அனுமதி கேட்டிருந்தார்.

Dhoni

இதனால் இந்திய அணியின் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் இருந்து விலகிய தோனி இரண்டு மாதம் எனக்கு ஓய்வு தேவைப்படுவதாகவும், அந்த ஓய்வு நேரத்தில் நான் இந்திய இராணுவத்தில் இணைந்து பயிற்சி பெற இருப்பதாகவும் தளபதி பிபின் ராவத்திடம் தோனி அனுமதி கேட்டிருந்தார்.

- Advertisement -

தோனிக்கு அனுமதி வழங்கிய பிபின் ராவத் பயிற்சிகளை மேற்கொள்ள ஏற்பாடுகளை செய்து கொடுத்தார். இந்நிலையில் காஷ்மீரில் நேற்று தனது பயிற்சியை துவங்கிய தோனி இந்திய ராணுவத்தின் பேராஷூட் ரெஜிமன்ட் வீரர்களுடன் இணைந்து பயிற்சியில் ஈடுபட்டார்.

Dhoni 2

இந்நிலையில் தோனியின் முதல் அதிகாரபூர்வமான பணியாக வரும் 31ம் தேதியிலிருந்து ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை காஷ்மீரில் ராணுவ குழுவினருடன் சேர்ந்து தோனி ரோந்து பணிக்கு செல்ல உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனை அடுத்து தோனி அதற்கான பயிற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Advertisement