‘இதை மட்டும் செய்யாதே’ – ஸ்ரேயாஸ்சுக்கு தோனி கொடுத்த அட்வைஸ்.!

Dhoni

இந்திய அணியின் முன்னாள் கேப்டனான தோனி குறித்து பல்வேறு வீரர்களும் பாராட்டியுள்ளனர். பல இளம் வீரர்களும் கிரிக்கெட்டில் தோனியை தான் ஆஸ்தான குருவாக பாவித்து தோனியை பின்பற்றி வருகின்றனர். இந்நிலையில் இந்திய இளம் வீரரும் தற்போதய இந்திய ஏ அணியின் கேப்டனுமான ஷ்ரேயாஸ் ஐயர் தோனியிடம் பெற்ற அலோசனை குறித்து தெரிவித்துள்ளார்.

dhoni

நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் டெல்லி அணியில் விளையாடிய ஷ்ரேயாஸ் ஐயர் அதிரடியாக விளையாடி 411 ரன்களை எடுத்தார். மேலும், இவரது பேட்டிங் ஸ்ட்ரைக் ரேட்132.58 ஆக இருந்தது. ஐபிஎல் போட்டியில் சிறப்பாக விளையாடிய இவர் சமீபத்தில் நடைபெற்ற இயர்லாந்து அணிக்கு எதிரான தொடரில் கூட இடம்பெறவில்லை .இதனால் சிறப்பான ஒரு வீரருக்கு அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்டது விவாதத்திற்கு உள்ளானது.

சமீபத்தில் இந்திய ஏ அணி -இங்கிலாந்து- லயன்ஸ் – வெஸ்ட் இண்டீஸ் மோதும் முத்தரப்பு ஒரு நாள் போட்டிகள் நடைபெற்று வந்தது . இந்த தொடரில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையில் இந்திய அணி தொடரை கைப்பற்றியது இருப்பினும் இவருக்கு இங்கிலாந்து அணிக்கு எதிரான எந்த ஒரு தொடரிலும் வாய்ப்பளிக்கப்படாமல் இருந்து வருகிறது.

Rishabh pant

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ஷ்ரேயாஸ் ஐயர் தோனி குறித்து தெரிவிக்கையில்” இந்திய கிரிக்கெட் அணியில் நான் சேர்ந்த பிறகு முடிந்த வரை சமூக வலைதளங்களில் இருந்து கொஞ்சம் தவிர்த்திருக்க வேண்டும் என்று தோனி எனக்கு ஆலோசனை கூறினார். சமூக வலைதளத்தில் ஒரு சில தேவை இல்லாத விமர்சனங்கள் எழும், அதனை காணும் போது அது நமது மனநிலையை பாதிக்கக்கூடிய விடயமாகவும் அமையும். அதனால் அவர் சொன்னபடி நான் ஓரளவுக்கு அதனை தவிர்த்து இருந்தேன். இருப்பினும், ஒரு சில விமர்சனங்கள் என்னை ஊக்குவிப்பதோடு, தொடர்ந்து பயணிக்க உதவும் என்று நான் நம்புகிறேன்