மும்பை வான்கடே மைதானத்தில் தோனிக்கு கிடைக்கவுள்ள மிகப்பெரிய கவுரவம் – விவரம் இதோ

Dhoni Finisher 2011 World Cup
- Advertisement -

எந்த ஒரு அலட்டல் அல்லது இறுதிப் போட்டியும் இல்லாமல் தோனி ஓய்வு பெற்றுவிட்டார். எளிமையாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஓய்வினை அறிவித்து இருந்தார். ஆனால் பல வீரர்கள் தோனிக்கு ஒரு மிகப்பெரிய இறுதிப் போட்டியை வைத்து பிரியா விடை கொடுத்து அனுப்பி இருக்க வேண்டும் என்று கூறி வருகின்றனர்.

Dhoni-1

தோனி சம்பந்தமாக பல நினைவுகள் இந்திய ரசிகர்களுக்கு இருக்கிறது. இதற்காக எப்படியாவது தோனியிம் நினைவாக ஏதாவது வைத்துவிட வேண்டும் என்று அனைவரும் தங்களது கோரிக்கைகளை வைத்து வருகின்றனர். இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக் தோனியின் ஜெர்சி என் 7ஆம் நம்பரை நிரந்தரமாக ஓய்வு பெற வைக்க வேண்டும் என்றும் கேட்டிருந்தார்.

- Advertisement -

இந்நிலையில் மும்பை கிரிக்கெட் நிர்வாகி ஒருவர் 2011ஆம் ஆண்டு இறுதிப் போட்டியில் தோனி அடித்த சிக்ஸர் நினைவாக அந்த பந்து விழுந்த சீட்டிற்கு அவரது பெயரினை வைத்து நினைவாக மாற்ற மும்பை கிரிக்கெட் சங்கத்திற்கு கோரிக்கை வைத்துள்ளார்.இதுகுறித்து மும்பை கிரிக்கெட் சங்கத்தின் முக்கிய உறுப்பினர் ஒருவர் மும்பை கிரிக்கெட் வாரியத்திற்கு கோரிக்கை வைத்துள்ளார்.

Dhoni

இந்திய கிரிக்கெட்டிற்கு மகத்தான பெரும் பங்களிப்பை வழங்கியவர் தோனிஅவருக்கு நன்றி மற்றும் மரியாதையை நாம் எப்போதும் செலுத்த வேண்டும். அவரது பெயரினை மும்பை வான்கடே மைதானத்தில் ஒரு நிரந்தர இருக்கை ஒதுக்க வேண்டும். இதுவரை வான்கடே மைதானத்தில் ஒரு சில பகுதிகளை முன்னாள் வீரர்களின் பெயரை வைத்து அர்ப்பணித்துள்ளோம்.

சச்சின் டெண்டுல்கர், சுனில் கவாஸ்கர், விஜய் மர்சன்ட் போன்றோருக்கு ஸ்டாண்ட் இருக்கின்றன. மேலும் பாலி உம்ரிகர் கேட் மற்றும் வினு மங்கட் கேட் ஆகியவை உள்ளன. அந்த வரிசையில் தோனிக்கும் இதே போன்ற ஒரு நினைவுச்சின்னத்தை மும்பை மைதானத்தில் அமைக்கலாம் என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement