தோனி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி – தோனியின் ஓய்வு குறித்து அவரது நண்பர் கூறிய புதிய தகவல்

Dhoni-1

உலகக்கோப்பை முடிந்ததோ இல்லையோ ஆலாளிற்கு தோனி எப்போது ஓய்வு பெறுவார் என்று கேட்டவாறு உள்ளனர். தோனியின் தரப்பில் இருந்து இது குறித்து அதிகாரபூர்வ தகவல் எதுவும் வரவில்லை என்ற நிலையில் அவர் ஓய்வு பெறுவது தான் நல்லது என்று பலரும் தங்களது கருத்துக்களை கூற துவங்கியுள்ளனர். இந்த நிலையில் தோனியின் ஓய்வு பற்றி அவரது நண்பரான அருண் பாண்டே முக்கியமான சில தகவல்களை கூறியுள்ளார்.

Dhoni

அருண் பாண்டே கூறியதாவது: ஓய்வு பெரும் திட்டம் எதுவும் தற்போது தொனியிடம் உடனடியாக இல்லை. மிக சிறந்த வீரரான தோனியின் ஓய்வு குறித்த பல்வேறு யூகங்கள் ரெக்கை கட்டி பார்ப்பது துரதிருஷ்டவசமானது என்று கூறியுள்ளார். அருண் பாண்டேவின் கருத்தை வைத்து பார்க்கும்போது தோனி நிச்சயம் தற்போது ஓய்வை அறிவிக்கமாட்டார் என்பது தெள்ள தெளிவாக தெரிகிறது.

அருண் பாண்டே எனபவர் தோனியின் மிக நீண்ட கால நண்பர் ஆவார். தோனியின் வர்த்தக நலன்களை இவர் கவனித்துக்கொள்கிறார். அதோடு ரீதி ஸ்போர்ட்ஸ் என்ற ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மெண்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாகவும் அவர் இருந்து வருகிறார். ஆகியால் அவர் நிச்சயம் தொனியிடம் இது பற்றி ஆலோசித்த பின்பே இந்த கருத்தை அவர் கூறி இருபபர் என்பதை நம்மால் ஓரளவிற்கு யூகிக்க முடிகிறது. இதனால் தோனி ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.