என்னையும் என் குடும்பத்தையும் அசிங்க அசிங்கமாக திட்றாங்க. தோனி ரசிகர்களால் சமூக வலைத்தளத்தில் இருந்து வெளியேறிய பிரபலம் – விவரம் இதோ

Dhoni

இந்திய கிரிக்கெட் அணியின் மிகச்சிறந்த கேப்டனாக இருந்தவர் தோனி. உலக கோப்பை தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு பின்னர் தற்போது வரை ஆடுகளத்திற்கு அவர் வரவில்லை. இதனால் இந்திய கிரிக்கெட் வாரியம் அவரது ஒப்பந்தத்தை ரத்து செய்தது. பின்னர் ஐபிஎல் தொடரில் நன்றாக ஆடி இந்திய அணியில் இடம் பிடிக்கலாம் என்ற ஆசையுடன் இருந்தார்.

Dhoni

ஆனால் கரோனா வைரஸ் என்ற கொடிய வைரஸ் அவரின் ஆசையில் மண் அள்ளிப் போட்டு விட்டது. ரசிகர்களுக்கும் தோனியை கடைசியாக டி20 உலக கோப்பை தொடரில் பார்த்துவிட வேண்டும் என்று தான் இருக்கிறது போலும். ஆனால் இந்தியாவின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா சமீபத்தில் டி20 உலகக் கோப்பை தொடருக்கான உத்தேச இந்திய அணியை வெளியிட்டார். 14 பேர் கொண்ட இந்த அணியில் தோனிக்கு அவர் இடம் கொடுக்கவில்லை.

இதனால் கடுப்பான தோனியின் ரசிகர்கள் அவரது சமூக வலைத்தள பக்கத்தை ஆய்ந்து எடுத்தனர். இதனால் சோகத்தின் விளிம்பிற்கு சென்ற ஆகாஷ் ஷ்லோக்கா ட்விட்டர் பக்கத்தில் இருந்து வெளியேறினார். இதுகுறித்து அவர் கூறுகையில் : நான் கடந்த சில நாட்களாக எனது சமூக வலைதள கணக்குகளை மூடி விட்டேன்.

chopra

ரசிகர்கள் என்னையும் எனது குடும்பத்தினரையும் அவதூராக பேசுகின்றனர். எனது குழந்தைகளையும் விட்டு வைக்கவில்லை. நான் தெரியாமல் செய்துவிட்டேன். இவ்வாறு கூறியும் அவர்கள் கேட்கவில்லை. தொடர்ந்து என்னையும் என் குடும்பத்தையும் தாக்கி அவதூறாக பேசுவதால் சமூக வலைத்தளத்தில் இருந்து வெளியேறினேன்.

- Advertisement -

தற்போது என்ன நடந்துவிட்டது என்று இவ்வாறு பேசுகிறார்கள் என்றும் எனக்கு தெரியவில்லை. என்று கூறினார். இருந்தாலும் தோனியின் ரசிகர்கள் அவரை விட்டு வைக்கவில்லை. அவரது சமூக வலைதளப் பக்கங்களில் சென்று அவரை ரிப்போர்ட் அடிப்பது, கண்டபடி மீம்ஸ் போடுவது தேவையில்லாத கமெண்ட் செய்வது என்று அட்டூழியத்தை அரங்கேற்றி வருகின்றனர் .இதனால் அவர் தற்போது மன உளைச்சலுக்கு உள்ளாகி உள்ளார்.

மேலும் அவருடன் பேசிய அகர்க்கர் தோனி குறித்து கூறுகையில் : அவர் ஓய்வு பெறுவது அவருடைய தனிப்பட்ட விருப்பம் அதுகுறித்து நான் கருத்து கூற விரும்பவில்லை. இந்திய தேர்வுக்குழுவினர் விரும்பினால் அவரை தேர்வு செய்யட்டும் இல்லையென்றால் அவர்களே முடிவு எடுக்கட்டும் இதுகுறித்து நான் பேசமாட்டேன் என்று தெளிவாக எஸ்கேப் ஆனது குறிப்பிடத்தக்கது.