இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிரான 2-வது டி20 போட்டி நேற்று இரவு ப்ளோரிடா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
Posters From Yesterday’s Match. ???? #INDvsWI #WIvIND #MSDhoni pic.twitter.com/jJAkPvdmmS
— ???? (@Stark_Fan007) August 4, 2019
அதன்படி முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ரோகித் சர்மா 67 ரன்களை அடித்தார். அதனை தொடர்ந்து 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 15.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 98 ரன்கள் குவித்திருந்தது.அப்போது மழை பெய்ததால் போட்டி தடைப்பட்டது மழை தொடர்ந்து நிற்காமல் இருந்ததால் போட்டியில் இந்திய அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் இருந்து விலகிய தோனி தற்போது ராணுவ பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். அவர் இல்லாத இந்த தொடரை தோனி ரசிகர்கள் மிகவும் வருத்தத்துடன் எதிர்கொண்டு வருகிறார்கள் என்பதை தோனி ரசிகர்கள் செய்த சிறிய விடயம் நேற்று வெளிக்காட்டியது.
Posters From Today’s Match. ❤
Proud To Be MSDian ❤#INDvsWI #WIvIND #MSDhoni pic.twitter.com/uQTWkdaLAv— MSDian Forever ???????? (@LoyalMSDFan) August 4, 2019
அதன்படி அமெரிக்க மைதானத்தில் நடந்த நேற்றைய போட்டியில் தோனியின் ரசிகர்கள் தோனியின் புகைப்படத்தை ஏந்தியபடி மிஸ் யூ தோனி என்று நின்று கொண்டிருந்தனர். இதன் மூலம் உலகின் எந்த மூலைக்கு சென்றாலும் தோனியின் ரசிகர்கள் பட்டாளம் இருப்பது தெளிவானது. இந்த பதிவினை தோனி ரசிகர்கள் ஷேர் செய்தும் வருகின்றனர்.