இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி தற்போது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி சிறப்பாக விளையாடி 329 ரன்கள் குவிக்க இங்கிலாந்து அணி 134 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதனைத்தொடர்ந்து தற்போது இரண்டாவது இன்னிங்சை விளையாடி வரும் இந்திய அணி இங்கிலாந்து அணியை விட 360 களுக்கும் மேலாக முன்னிலை பெற்று பேட்டிங் செய்து வருகிறது.
இந்நிலையில் இந்த போட்டியின் போது தோனி ரசிகர்கள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் காண்பித்த ஒரு (புகைப்படம்) போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது எப்பொழுதுமே தோளின் மீது அன்பை பொழியும் சென்னை ரசிகர்கள் அவர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும் இன்னும் மறக்காமல் டோனியை ஆதரித்து பாராட்டி வருகின்றனர்.
அந்த வகையில் சென்னை டெஸ்ட் போட்டியில் தற்போது ரசிகர்கள் அனுமதிக்கப்பட்டிருக்கும் வேளையில் தல தோனியின் நினைவாக அவருக்காக ஒரு போஸ்டரை காண்பித்தனர். அதில் “டியர் தோனி தேங்க்ஸ் பார் இவரிதிங்”, “வி மிஸ் யூ” தல பார் எவர் என தோனியின் மீது உள்ள அன்பை வார்த்தைகளாக தெரிவித்து அதில் நன்றியை தெரிவித்து உள்ளனர்.
We miss you Thala @msdhoni 💛🦁#INDvENG #Dhoni #TeamIndia pic.twitter.com/lItv6ujZ0d
— MS Dhoni Fans Official (@msdfansofficial) February 13, 2021
அவர்களின் இந்த செயல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து டோனி ஓய்வு பெற்றாலும் ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் தற்போது ஐபிஎல் இல்லாத வேளைகளில் அவரது பண்ணை வீட்டில் உள்ள நிலத்தில் இயற்கை விவசாயம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.