சூப்பர் ஓவர் த்ரில் வெற்றி எல்லாம் விடுங்க. தோனி ரசிகர்கள் என்ன பண்ணி இருக்காங்கனு பாருங்க – வைரலாகும் புகைப்படம்

Dhoni-1
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர் தற்போது நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் மூன்று போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை 3-0 என்று கைப்பற்றிய நிலையில் இன்று இவ்விரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டி20 போட்டி வெலிங்டன் நகரில் இன்று நடைபெற்றது.

Kohli

- Advertisement -

இந்த போட்டியிலும் இரு அணிகளும் 165 ரன்களை குவிக்க போட்டி கடந்த 3 ஆவது போட்டியை போல சூப்பர் ஓவர் வரை சென்றது. இந்த சூப்பர் ஓவரில் நியூசிலாந்து 13 ரன்கள் குவிக்க 14 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலையில் ராகுல் மற்றும் கோலி ஆகியோர் சிறப்பாக விளையாடி இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்ல 4-0 என்ற கணக்கில் இந்த தொடரில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது.

என்னதான் இந்திய அணி இந்த போட்டியில் திரில் வெற்றி பெற்றாலும் தோனியின் ரசிகர்கள் இன்று மைதானத்தை தெறிக்க விட்டனர் என்றே கூறலாம். ஏனெனில் கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்கு மேல் தோனி இந்திய அணியில் விளையாட வில்லை இருப்பினும் தோனியின் மீதான அன்பை ரசிகர்கள் எந்தவொரு தொடரிலும் வெளிப்படுத்த தவறுவது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதே போன்று தற்போது நியூசிலாந்து நாட்டில் நடைபெறும் நடைபெற்று வரும் இந்த தொடரிலும் தோனியின் ரசிகர்கள் அவர்களது அன்பை சிறப்பாக வெளி காட்டி வருகின்றனர்.

அதன்படி இன்றைய போட்டியில் மைதானத்தின் மேற்பகுதியில் “வீ மிஸ் யூ தோனி” என்ற பேனரை வைத்து ரசிகர்கள் தங்களது ஆதரவைத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. இந்த புகைப்படத்தை இந்திய கிரிக்கெட் அணியின் நிர்வாகம் ஆன பிசிசிஐ தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டது. மேலும் இந்த புகைப்படம் பதிவிட்டு சில மணி நேரங்களிலேயே லைக்ஸ்களை குவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement