தோனிக்கு எதிராக கோஷமிடும் காஷ்மீர் மக்கள் – வைரலாகும் செய்தி

Dhoni
- Advertisement -

இந்திய அணியின் முன்னணி வீரரான தோனி தற்போது இரண்டு மாதங்கள் ராணுவப் பயிற்சி எடுத்து வருகிறார். அவர் தற்போது காஷ்மீர் பகுதியில் ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகிறார் என்ற தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

Dhoni

- Advertisement -

அதன்படி காஷ்மீரின் பாரமுல்லா என்ற பகுதியில் ரோந்துக்கு சென்றபோது அங்கிருந்த மக்கள் பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் டோனியை எதிர்த்து கோஷம் இட்டதாகவும் தெரிகிறது மேலும் பாகிஸ்தான் அணி வீரரானஅப்ரிடி பேர் சொல்லி அவரை ஆதரிப்பதாகவும் தோனியை அங்கிருந்து வெளியேறுமாறு கோஷமிட்டுள்ளனர்.

இருப்பினும் தோனிக்கு எந்த ஒரு பிரச்சனையும் ஏற்படவில்லை.இந்த நிகழ்வு வீடியோவாக வெளியாகியுள்ளது அந்த வீடியோ தற்போது பாகிஸ்தானில் ஒளிபரப்பட்டு வருவதாகவும் தோனிக்கு சிலர் காஷ்மீரில் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

Dhoni 2

ஆனால் அந்த வீடியோ குறித்த முழு தகவல் உறுதியாக அறியப்படவில்லை. மேலும் அதுபோன்ற வீடியோ இணையத்தில் பரவவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த செய்தி குறித்து முழு விவரம் அதிகாரபூர்வமாக வெளியாகினால் மட்டுமே இந்த தகவல் உண்மையா என்பது தெரியும்.

Advertisement