MS Dhoni : படம் பார்க்க தியேட்டர் சென்ற தோனி மற்றும் ஜாதவ் – காரணம் இதுதான்

இந்திய அணி தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியிலும், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்று இந்த தொடரில் இரண்டு வெற்றிகளுடன் சிறப்பாக விளையாடி வருகிறது

Dhoni
- Advertisement -

இந்திய அணி தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியிலும், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்று இந்த தொடரில் இரண்டு வெற்றிகளுடன் சிறப்பாக விளையாடி வருகிறது. இந்நிலையில் இந்திய அணியின் மூன்றாவது போட்டி 13ஆம் தேதி நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற உள்ளது.

Dhawan

- Advertisement -

இந்நிலையில் நேற்று இந்திய அணியின் வீரர்களான கேதார் ஜாதவ், தோனி மற்றும் ராகுல் ஆகியோர் இந்தி திரைப்படத்தை காண இங்கிலாந்தில் உள்ள ஒரு தியேட்டருக்கு சென்று திரைபடத்தை கண்டு திரும்பியுள்ளனர். உலக கோப்பை போட்டிகள் நடக்கும் இந்த நேரத்தில் திரைப்படத்துக்கு சென்று வந்த இந்திய வீரர்கள் குறித்து செய்தி தற்போது வெளியாகியுள்ளது.

இருப்பினும் அதன் காரணம் யாதெனில் நேற்று பயிற்சியில் ஈடுபட்ட இந்திய அணி நாளை சிறிது நேரம் பயிற்சிக்குப் பிறகு மழை விடாமல் தொடர்ந்து பெய்ததால் பயிற்சியும் பாதியில் தடைப்பட்டது. மேலும் ஹோட்டல் அறையில் நீண்ட நேரம் இருக்க முடியாது என்பதற்காக திரைப்படத்தினை பார்க்க முடிவு செய்துள்ளார் ஜாதவ். அதன்படி அவருடன் தோனி மற்றும் ராகுல் ஆகியவர்களை வற்புறுத்தி அழைத்துச் சென்றுள்ளார் ஜாதவ்.

Kedar-Jadhav

இந்த விடயம் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. நாளை நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் தவான் காயம் காரணமாக இடம் பெறாமல் இருப்பதால் நாளைய போட்டியில் ராகுல் துவக்க வீரராக களமிறங்க உள்ளது குறிப்பிட தக்கது மேலும். ரம்ஜான் பண்டிகையை ஒட்டி சல்மான்கான் நடிப்பில் வெளியான பாரத் என்ற திரைப்படத்தை காண இவர்கள் தியேட்டருக்கு சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Advertisement