ஜூலை மாதத்திற்கு பின் தோனி தவறவிட்ட தொடர்கள். சோகத்தில் முடிந்த தோனியின் பயணம்

Dhoni
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான தோனி இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கவில்லை. மேலும் கடந்த சில தொடர்களாகவே அணியில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டு வருகிறார். இதனால் தோனியின் ரசிகர்கள் எப்போது மீண்டும் தோனி கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்பார் என்ற பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

Dhoni

- Advertisement -

இந்நிலையில் ஏற்கனவே ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தோனி எனது ஓய்வு முடிவு குறித்தும் எனது கிரிக்கெட் குறித்தும் ஜனவரி மாதம் வரை எந்த கேள்வியும் கேட்காதீர்கள் என்று தெரிவித்திருந்தார். பி.சி.சி.ஐ யின் தலைவர் கங்குலியும் தோனியின் ஓய்வு குறித்த முடிவு அவரே தீர்மானிப்பார் என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தோனிக்கு இந்த 2019ஆம் ஆண்டு முழுவதுமே ஒரு கடினமான ஆண்டாகவே கடந்து இருக்கிறது. ஏனெனில் உலக கோப்பை தொடர் துவங்கும் முன்னரே உலக கோப்பையுடன் தோனி ஓய்வு பெறுவார் என்று செய்திகள் வெளியாகின. ஆனால் தோனி உலக கோப்பைக்கு பின்னரும் விளையாடவே முடிவு செய்தார். அவரை இந்திய அணியில் தொடர அணி நிர்வாகம் விரும்பவில்லை என்றே அடுத்தடுத்த தொடர்களில் தெரிந்தது.

Dhoni-1

ஏனெனில் உலக கோப்பை தொடர் முடிந்து முதல் தொடராக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக தோனி விருப்ப ஓய்வு கேட்டு இருந்தார். ஆனால் அதற்கு பின்னர் வந்த வங்கதேச தொடரிலும் அதன் பின்னர் வந்த வெஸ்ட் இண்டீஸ் தொடரிலும் அவரது பெயர் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தற்போது ஜனவரி மாதம் துவங்கும் இலங்கை மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிரான தொடரில் மீண்டும் இந்திய அணிக்கு தோனி திரும்புவார் என்று நம்பப்பட்டது.

dhoni

ஆனால் தற்போது இலங்கை மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிரான தொடரில் டோனியின் பெயர் இடம்பெறவில்லை. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர் தொடர்ந்து வாய்ப்பு மறுக்கப்பட்டு வருவதால் பெரிய இடைவெளி விழ துவங்கியுள்ளது. இந்நிலை தொடர்ந்தால் தோனி ஓய்வு அறிவிப்பை அறிவிப்பது தவிர வேறு வழி இல்லை என்று கிரிக்கெட் விமர்சகர்கள் பேசி வருகின்றார்கள். அதனால் தோனியின் பயணம் தற்போது முடிவுக்கு வந்துள்ளதாக கருதப்படுகிறது இருப்பினும் அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்கு பின்னர் இறுதியான முடிவு தெரியவரும் என்றும் எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement