பைக் முடிஞ்சி கார் முடிஞ்சி கடைசில இப்ப கப்பலுக்கு போய்ட்டாரு. மாலத்தீவில் கப்பல் ஓட்டி அசத்திய தல – வைரலாகும் வீடியோ

- Advertisement -

இந்திய அணியின் முன்னணி வீரரான தோனி உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் எந்தவித போட்டியிலும் இதுவரை விளையாடவில்லை. அதன் பின்னர் இந்திய அணி தொடர்ச்சியாக பல்வேறு தொடர்களில் விளையாடி வந்தாலும் கடந்த ஆறு மாதங்களாக எந்த ஒரு போட்டியிலும் தோனி பங்கேற்காததால் ஒப்பந்த வீரர்களுக்கான பட்டியலில் இருந்து அவரது பெயர் நீக்கப்பட்டது. இதனால் தோனி இனிமேல் விளையாடுவது சந்தேகம் என்ற தகவலும் எழுந்துள்ளது.

- Advertisement -

இந்நிலையில் இதுகுறித்து பெரிதாக அலட்டி கொள்ளாமல் தோனி தனது மகளின் ஐந்தாவது பிறந்த நாளுக்காக தனது நண்பர்களுடன் மாலத்தீவு சுற்றுலா மேற்கொண்டுள்ளார். இந்த சுற்றுலாவின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களும் வீடியோக்களும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதிலும் குறிப்பாக தோனி தனது சக அணி வீரரான ஆர்.பி.சிங் மற்றும் பியூஸ் சாவ்லா ஆகியோருக்கு பானிபூரி வழங்கும் வீடியோ மற்றும் வாலிபால் விளையாடும் வீடியோ என இணையத்தில் அடுத்தடுத்து ஹிட் அடித்தது.

அந்த வகையில் தற்போது தோனி மாலத்தீவில் ஷிப் ஒன்றினை இயக்கம் விடியோவும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. தனது கிரிக்கெட் வாழ்வின் ஆரம்ப காலத்தில் இருந்து மிகப்பெரிய பைக் பிரியரான தோனி தனது பண்ணை வீட்டில் தனது பைக்குகளை நிறுத்துவதற்காகவே தனி இடத்தினை வைத்துள்ளார். மேலும் அவரிடம் கார் கலெக்ஷன்களும் உள்ளன.

இதனை தொடர்ந்து தற்போது அவர் ஷிப் ஓட்டும் வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த சில நாட்களாகவே தோனி குறித்த தகவல்கள் அதிகமாக வெளியாகி வருகின்றன. மேலும் விரைவில் அவர் ஐ.பி.எல் தொடருக்கான பயிற்சியினை சென்னையில் துவங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement