கொரோனா எதிரொலி : 100 குடும்பங்களுக்கு உதவி செய்தாரா தோனி. உண்மையை கூறிய மனைவி சாக்சி

Sakshi
- Advertisement -

கொரோனா காரணமாக அடுத்த 15 நாட்களுக்கு 100 குடும்பங்களுக்கு மகேந்திர சிங் தோனி உதவி செய்வதாக ஒரு செய்தி வந்துள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா இந்தியாவிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. கிட்டத்தட்ட தற்போது வரை 700-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

corona 1

கிட்டத்தட்ட 20 பேர் இறந்து போயுள்ளனர். இதன் காரணமாக சமூக தொற்று பரவாமல் இருக்க 21 நாட்கள் இந்தியாவில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவே முடங்கிப் போயுள்ளது. இந்த முடக்கத்தால் தினக் கூலி வேலை செய்வோர் கண்டிப்பாக பாதிக்கப்படுவார்கள்.

- Advertisement -

இவர்களுக்கு உதவ இந்திய முன்னாள் கேப்டன் சச்சின் டெண்டுல்கர் மற்றும் சவுரவ் கங்குலி ஆகியோர் முன்வந்துள்ளனர். கங்குலி 50 லட்சம் ரூபாய் அளவிலான அரிசியை வழங்கியுள்ளார். சச்சின் டெண்டுல்கர் 50 லட்சம் ரூபாய் ( முதலமைச்சர் நிதி 25 லட்சம், பிரதமர் பொதுநிவாரண நிதி 2 லட்சம் ) பணமாக வழங்கியுள்ளார்.

Dhoni-1

இதேபோன்று இன்று இணையத்தில் தோனி தனது அறக்கட்டளை மூலம் புனேவில் உள்ள ஒரு கிராமத்தில் உள்ள 100 குடும்பங்களுக்கு உதவி செய்வதாக ஒரு செய்தி வந்தது. இது அதிகாரப்பூர்வமற்ற செய்தியாகும். இதனை பலரும் தங்களது விருப்பத்திற்கேற்ப வதந்தியை சேர்த்து பரப்பினர்.

- Advertisement -

ஆனால் இது உண்மையல்ல என மனைவி சாக்சி கடுமையாக விமர்சித்து தெரிவித்துள்ளார். தோனி அப்படி எந்த ஒரு நிதி உதவியையும் அறிவிக்கவில்லை அவ்வாறு அறிவித்தாலும் இது போன்ற சிறிய உதவியாக இருக்காது. பத்திரிக்கையாளர்களும் ஊடகவியலாளர்களும் தங்களது அறம் சார்ந்து செயல்பட வேண்டும். இவ்வாறு ஒரு வந்ததியை பரப்பக்கூடாது என்று காட்டமாக தெரிவித்துள்ளார் சாக்சி தோனி.

Sakshi

இதனை சாக்சி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவாக எழுதி வெளியிட்டுள்ளார். அவரின் இந்த பதிவு புகைப்படமாக வைரலாகி வருகிறது. மேலும் இதுபோன்ற பொய்யான தகவல்களை பரப்பவேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Advertisement