நேற்றைய போட்டியில் ஏன் தோனி பேட்டிங் செய்ய களமிறங்கவில்லை தெரியுமா ? – விவரம் இதோ

MSdhoni
- Advertisement -

உலக கோப்பை தொடரின் 44 ஆவது லீக் போட்டி நேற்று லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் கோலி தலைமையிலான இந்திய அணியும், கருணரத்னே தலைமையிலான இலங்கை அணியும் மோதின.

ind vs sl

- Advertisement -

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழந்து 264 ரன்களை குவித்தது அதிகபட்சமாக மேத்யூஸ் 113 ரன்கள் குவித்தார்.

பிறகு 265 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இந்திய அணி 43.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 265 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்திய அணியின் தொடக்க வீரர்களான ராகுல் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் சதம் அடித்தனர். ஆட்ட நாயகனாக ரோகித் தேர்வானார்.

rohith

நேற்றைய போட்டியில் வெற்றிக்கு அருகில் இருக்கும்போது பண்ட் 4 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார். அப்போது தோனி இறங்குவார் என்றே அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் பாண்டியா இறங்கி வெற்றிக்கான ரன்களை அடித்தார். தோனி இருக்கும்போது பாண்டியா முன்கூட்டியே இறங்க காரணம் யாதெனில் துவக்க வீரர்களில் ஒருவர் சதமடித்தால் பாண்டியா அதிரடியாக ஆட முன்கூட்டியே இறங்குவார் என்று கோலி ஏற்கனவே ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.

pandya

மேலும் தோனிக்கு அடுத்து அந்த இடத்தில் பாண்டியாவினை பினிஷராக உருவாக்கும் திட்டமும் இருப்பதால் பாண்டியாவை அதிக அளவில் உபயோகிக்க நினைக்கிறார் கோலி. இதுவே நேற்றைய போட்டியில் தோனி இறங்காததன் காரணம் ஆகும்.

Advertisement