தனது பேட்டை தானே வடிவமைத்த டோனி.!

dhonibat
- Advertisement -

கிரிக்கெட் வீரர்கள் பயன்படுத்தும் உபகரணங்கள் அனைத்தும் எப்போதும் கொஞ்சம் ஸ்பெசளாக தான் இருக்கும். அதுவும் நட்சத்திர வீரர்கள் என்றால் அவர்கள் பயன்படுத்தும் உபகரனங்கள் தான் அவர்களின் கேடயம் என்று கூட கூறலாம். அந்த வகையில் இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரர் தோனி பயன்படுத்தும் பேட் பற்றிய தகவல்களை கொண்ட பிரத்யேக பதிவு தான் இது.

dhoni

- Advertisement -

கிரிக்கெட் உலகின் கேப்டன் கூல் என்றழைக்கப்படும் தோனி எப்போதும் தனது பேட் குறித்த தேர்வுகளில் மிக கவனமாக இருப்பார். தோனி அவர் பயன்படுத்தும் பேட்டை அவர் சவுகர்யத்திற்கு ஏற்றார் போல தான் வடிவ மைய்த்துள்ளார், இல்லை என்றால் அவர் அடிக்கும் ஷாட்டிற்கெல்லாம் பேட் இரண்டாக பிளந்து விடும். எனவே, அவரது பேட் எப்போதும் அவர் அவர் பயன்படுத்தும் வண்ணம் உறுதியாகவும், நிலை தண்மை கொண்டதாகவும் இருக்க வேண்டும்.

தோனி பயன்படுத்தும் பேட்டை வடிவமைபவரின் பெயர் ரன்ஷிபே. இவர் தான் கடந்த 3 ஆண்டுகளாக தோனியின் பேட்டை வடிவமைப்பதோடு, ஒரு வேளை பேட் சேதமடைந்தால் அதனை சரி செய்தும் வருகிறார். இவர் தோனிக்கு மட்டும் பேட் வடிமைப்பாளர் இல்லை. கிரிக்கெட் உலகின் அதிரடி பேட்ஸ்மேன்களான விராட் கோலி, பேன் ஸ்டோக்ஸ், ஜோ ரூட் போன்ற வீரர்களின் பேட்களையும் பழுது நீக்கி சரிசெய்து தந்து வருகிறார்.

dhonispartan

சமீபத்தில் தோனி பயன்படுத்தும் பேட்டின் ரகசியம் குறித்தும், அதன் வடிவம் குறித்தும் பேட்டி ஒன்றில் பகிர்ந்த ரன்ஷிபே ‘தோனி பயன்படுத்தும் பேட்டின் அடி பகுதி சற்று வளைந்து இருக்க வேண்டும் என்று தோனி கேட்டுக்கொண்டார். அதற்கு ஒரு முக்கிய காரணமும் இருக்கிறது. ஏற்கர் பந்துகளை ஆடும் போது பந்து பேட்டின் அடி பகுதியில் தான் படும் இதனால் பேட் பாதுகாப்பாக இருக்கவே, பேட்டின் அடிப்பகுதி வளைந்து இருக்க வேண்டும் என்று தோனி விரும்புகிறார்’ என்று தெரிவித்துள்ளார்.

Advertisement