மனைவியை கட்டியணைத்து தோனி டேன்ஸ். கலைகட்டிய புத்தாண்டு கொண்டாட்டம் – வைரலாகும் வீடியோ

Sakshi

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான தோனி இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கவில்லை. மேலும் கடந்த சில தொடர்களாகவே அணியில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டு வருகிறார். இதனால் தோனியின் ரசிகர்கள் எப்போது மீண்டும் தோனி கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்பார் என்ற பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

இந்நிலையில் தோனியின் மனைவி சாக்ஷி தோனி தங்களது புத்தாண்டு கொண்டாட்டத்தின் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் வெளியான சிலமணி நேரத்திலேயே ரசிகர்களின் வரவேற்பை பெற்றதுமின்றி அதிக அளவு லைக்ஸ் மற்றும் ஷேர் செய்யப்பட்டும் வருவது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமின்றி தற்போது அவர்கள் இருவரும் ஒரு நட்சத்திர ஹோட்டலில் அவர்களது நண்பர்களுடன் இணைந்து நடனமாடி புத்தாண்டை கொண்டாடிய வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் தோனி மற்றும் அவரது மனைவி உட்பட அவரது குடும்ப நண்பர்கள் பலரும் இருப்பது குறிப்பிடத்தக்கது.