விமானத்தில் சக வீரர்களை கிண்டல் செய்த பாண்டியா..! பதிலுக்கு பாண்டியவை கலாய்த்த தோனி..!

dhoni
- Advertisement -

இந்திய அணி வரும் ஜூன் 27 ஆம் தேதி ஐயர்லாந்து அணிக்கு எதிரான இரண்டு டி20 போட்டியிலும், அதனை தொடர்ந்து இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட், ஒரு நாள் போட்டி மட்டும் டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக இரு தினங்களுக்கு முன்னர் விமானம் மூலம் இங்கிலாந்து சென்றடைந்தது.
hardik

இந்திய அணி வீரக்ளின் இந்த பயணத்தின் போது இந்திய வீரர் ஹர்திக் பாண்டிய தன்னுடன் பயணம் செய்துகொண்டிருந்த சக போட்டியாளர்களை பேட்டி எடுத்து அதனை வீடியோ பதிவு செய்துள்ளார். அதில் ஹர்திக் பாண்டியாவும், சாகலும் மைக் பிடித்து கொண்டு இந்திய கிரிக்கெட் அணியினரிடம் ஜாலியாக கிண்டல் செய்துக் கொண்டே கேள்வி கேட்கின்றனர்.

- Advertisement -

அந்த வீடியோவில் ஹர்திக் பாண்டிய விமானத்தில் அமர்த்திருந்த மனிஷ் பாண்டே ,உமேஷ் யாதவ் போன்ற இளம் வீரர்களை கிண்டல் செய்துள்ளார். பின்னர் ஒவ்வொருவராக பேட்டியெடுத்த பாண்டியா இறுதியில் அணியின் மூத்த வீரரான கேப்டன் கூல் தோனியிடம் பேட்டி எடுக்க ஆர்வமாக செல்கிறார்.


அப்போது டிவியில் திரைப்படம் பார்த்துக்கொண்டிருந்த தோனியிடம் பாண்டியா மைக்கை நீட்டியதுடன், தோனி தனது கையில் வைத்திருந்த ரஸ்க்கை பாண்டியாவிற்கு கொடுத்து இடத்தை விட்டு காளி செய்யும்படி கூறுகிறார். பின்னர் பாண்டியாவும் ‘மஹி பாய் , மஹி பாய்’ என்று குறிகொண்டே நகர தோனி தலையை கீழே குனிந்தபடி சிறுத்துக் கொள்கிறார்

Advertisement