
இந்திய அணி நடப்பு உலக கோப்பை தொடரில் இந்திய அணி அரையிறுதியில் தோற்று வெளியேறியது. இந்நிலையில் இந்திய அணி பற்றி பலரும் பல கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்திய அணியின் மீதும், தோனியின் மீதும் மெல்ல மெல்ல விமர்சனங்கள் எழத்துவங்கி உள்ளன.
உலகக் கோப்பை தொடர் முடிந்தும் ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட தோனி ஓய்வு குறித்து எந்த ஒரு அறிவிப்பும் இதுவரை வெளியிடவில்லை. மேலும் 2020 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை தொடரில் தோனி விளையாடுவார் என்று கூறப்பட்ட நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியம் தற்போது அவருக்கு நெருக்கடி கொடுக்கத் தொடங்கியுள்ளது.
உடனடியாக ஓய்வு முடிவை தோனி அறிவிக்க வேண்டும். இல்லை என்றால் இனி வரும் அடுத்தடுத்த தொடர்களில் அவர் அணிக்கு தேர்வு செய்யப்பட மாட்டார் என்று முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து இந்திய கிரிக்கெட் நிர்வாகி ஒருவர் கூறும்போது : தோனிக்கு பின்னால் பண்ட் போன்ற பல இளம் வீரர்கள் உள்ளனர். அவர்களுக்கு வழி கொடுக்கும் வகையில் தோனி ஓய்வு பெறவேண்டும்.
உலக கோப்பையில் தோனியின் ஆட்டத்தை பார்த்தோம். அவர் கடைசி கட்டத்தில் தடுமாறுகிறார் எந்த பந்துகளையும் அவரால் சரியாக எதிர்கொள்ள முடியவில்லை. இது அணிக்கு மோசமான பாதிப்பை ஏற்படுத்துகிறது. அடுத்து நடக்கும் வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு அவரை அணியில் எடுக்க மாட்டோம் சர்வதேச கிரிக்கெட்டில் அவர் தோனி இனி சாதிக்கவும் நிரூபிக்கவோ எதுவும் இல்லை. எனவே அவர் பெருந்தன்மையோடு ஓய்வு அறிவிப்பை வெளியிட வேண்டும்.
மேலும் அவ்வாறு ஓய்வை அறிவிக்கவில்லை என்றால் அணியில் தேர்வு செய்ய வாய்ப்பு இல்லை என்று கூறியது குறிப்பிடத்தக்கது. மேலும் இதுகுறித்து தேர்வு குழு தலைவர் எம் எஸ் கே பிரசாத் தோனியிடம் விரைவில் கலந்து பேசி இருக்கிறார் என்று கூறப்படுகிறது. இதனால் தற்போது முடிவுக்கு வர உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.