சுதந்திர தினமான இன்று தல தோனி லடாக்கில் என்ன செய்து கொண்டிருக்கிறார் தெரியுமா ? – விவரம் இதோ

Dhoni
- Advertisement -

இந்திய அணியின் முன்னணி வீரரான தோனி தற்போது இந்திய ராணுவத்துடன் பயிற்சியினை ஜம்மு காஷ்மீர் பகுதியில் மேற்கொண்டு வருகிறார். அவருடைய பயிற்சி இன்றுடன் முடிவடையும் என்று எதிர்பார்த்த நிலையில் அவர் மேலும் சில இடங்களுக்கு இந்திய ராணுவத்துடன் பயணிக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Dhoni

- Advertisement -

73 வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் சுதந்திர தினத்தை லடாக்கில் உள்ள ராணுவ வீரர் உடன் தோனி கொண்டாடினார். அங்குள்ள ராணுவ பள்ளிக்கு சென்ற அவர் மாணவர்களுடன் உரையாடினார். முன்னதாக நேற்று ராணுவ மருத்துவமனைக்கு அவர் சென்றார். அங்கு சிகிச்சை பெற்று வரும் ராணுவ வீரர்களிடம் நலம் விசாரித்து பேசிக்கொண்டிருந்தார்.

இது தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றனர். இந்நிலையில் இந்த பயிற்சியை முடித்துக்கொண்டு சியாச்சின் மலைப் பகுதிக்கு செல்வார் என்று கூறப்படுகிறது. உலகின் மிக உயர்ந்த பணி மலைப் பகுதியான இங்கு போர் பள்ளிகளை அவர் பார்வையிட இருக்கிறார். ராணுவ வீரர்கள் என்ன நிலையில் இருக்கிறார்கள் எப்படி அவர்கள் செயல்படுகிறார்கள் அவர்களின் பயிற்சி உள்ளிட்டவற்றை தோனி அங்கு தெரிந்து கொள்ள இருக்கிறார்.

Dhoni 2

ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கும்போது தோனிக்கு ஆயுத பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாகவும், எதிரிகளை எவ்வாறு டார்கெட் செய்வது என்பது போன்ற பல விளக்கங்கள் அவரிடம் கூறப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. எனவே இன்னும் சிறிது நாட்கள் அவர் இந்திய ராணுவத்தில் பயிற்சி பெற இருப்பதாகவும் தற்போது தகவல் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது

Advertisement