தோனி கிரிக்கெட்டில் இருந்து ஒய்வு பெறுகிறாரா..! தோனி கொடுத்த சிக்னல்..! சோகத்தில் ரசிகர்கள்..!

Advertisement

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான தோனி கடந்த 2014 ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஒய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். தற்போது ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடி வரும் இந்த தோனி, இந்த போட்டிகளில் இருந்தும் ஒய்வு பெற போவதாக நேற்று(ஜூலை 17) ஒரு சமிக்சையை செய்துள்ளார் என்ற ஒரு செய்தி தற்போது வைரலாக பரவி வருகிறது.
dhoni
இங்கிலாந்து சுற்றுப்பயணம் சென்றுள்ள கோலி தலைமையிலான இந்திய அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் 1-2 என்ற கணக்கில் தோல்வியடைந்துள்ளது. இந்த தொடரின் மூன்றாவது போட்டி நேற்று (ஜூலை 17)நடைபெற்றது. இந்த போட்டி முடிந்து வீரர்கள் அனைவரும் உடை மாற்றும் அறைக்கு திரும்பினார். அப்போது தோனி நடக்குவர்களிடம் இருந்து பந்துகளை வாங்கியுள்ளார். தற்போது இதனை வைத்து தோனி விரைவில் கிரிக்கெட்டில் இருந்து ஒய்வு பெற்று விடுவார் என்று ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

இதற்கு முக்கிய காரணம் என்னவெனில், தோனி கடந்த 2014 ஆம் டெஸ்ட் போட்டியில் இருந்து ஒய்வு பெறுவதற்கு முன்னதான போட்டியில் நடுவர்களிடம் இருந்து ஸ்டம்ப்புகளை பெற்றுக்கொண்டார். அதன் பின்னரே தனது ஒய்விரிப்பை அறிவித்தார் தோனி. எனவே, இந்த சம்பவத்துடன் நேற்று நடைபெற்ற சம்பவத்தை ஒப்பிட்டு தோனி கிரிக்கெட்டில் இருந்து விரைவில் ஒய்வு பெறுவார் என்று ரசிகர்கள் கணித்து வருகின்றனர்.

dhoni
dhoni

அதே போல இங்கிலாந்து அணிக்கு எதிரான இந்த தொடரில் தோனி அவ்வளவாக ஜொலிக்கவில்லை. முதல் ஒரு நாள் போட்டியில் தோனிக்கு பேட்டிங் விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இரண்டாவது மற்றும் மூன்றாவது போட்டியில் விளையாடிய தோனி 37 மற்றும் 42 ரன்களை மட்டுமே எடுத்திருந்தார். அதிலும் குறிப்பாக இரண்டாவது போட்டியில் மந்தமாக விளையாடினார் என்று பல்வேறு விமர்சங்களும் எழுந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement