இந்திய அணி நடப்பு உலகக் கோப்பை தொடரில் அரையிறுதிப் போட்டியில் தோல்வி அடைந்து உலக கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது. அடுத்து இந்திய அணி மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் கலந்து கொண்டு 3 டி20, 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.

இந்த தொடருக்கான இந்திய அணி நாளை அறிவிக்கப்பட உள்ள நிலையில் இந்திய அணியில் தோனி இடம்பெற மாட்டார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. உலக கோப்பை தொடரில் தோனியின் மெதுவான ஆட்டம் விமர்சனத்துக்கு உள்ளானது. மேலும் தோனி ஓய்வு பெறவேண்டும் என்றும் பலரும் அவரை வற்புறுத்தி வருவதாக தெரிகிறது.
இந்நிலையில் தோனி ஓய்வு குறித்து அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. ஒருவேளை நாளை மறுநாள் 15 பேர் கொண்ட இந்திய அணியில் தோனி தேர்வாகவில்லை என்றால் தோனியின் எதிர்காலம் இதோடு முடிந்து விடும் என்று முக்கிய அதிகாரிகள் சிலர் கூறுகின்றனர். இனி பண்டிற்கே வாய்ப்பு கொடுக்கப்படும் என்றும் தெரிகிறது.

இருப்பினும் நவம்பர் மாதம் நடைபெற உள்ள முத்தரப்பு தொடரில் தோனிக்கு பிரியா விடை போட்டி வைத்து வழியனுப்பும் யோசனையும் பி.சி.சி.ஐ யிடம் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.



