MS Dhoni : தோனி கேப்டனாக இருந்தபோது தாமதமாக பயிற்சிக்கு வரும் வீரருக்கு தண்டனை என்ன தெரியுமா ? – விவரம் இதோ

இந்திய அணியின் முன்னணி கேப்டன் தோனி இந்திய அணிக்காக 50 ஓவர் உலக கோப்பை, 20 ஓவர் உலக கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் கோப்பை என அனைத்து வகையான ஐ.சி.சி. கோப்பை

Ms-Dhoni
- Advertisement -

இந்திய அணியின் முன்னணி கேப்டன் தோனி இந்திய அணிக்காக 50 ஓவர் உலக கோப்பை, 20 ஓவர் உலக கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் கோப்பை என அனைத்து வகையான ஐ.சி.சி. கோப்பைகளையும் இந்திய அணிக்காக பெற்று தந்த ஒரே கேப்டன் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

yuvidhoni

- Advertisement -

இந்நிலையில் தோனி கேப்டனாக இருந்தபோது வீரர்களிடையே அவரது செயல்பாடும் வீரர்களுக்கு அவர் கொடுக்கும் அறிவுரைகளை பற்றியும் புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி தோனி ஒரு சிறந்த கேப்டன் என்பதற்கு பின்வரும் விடயம் ஒரு முக்கிய காரணியாக இருக்கிறது.

அது யாதெனில் தோனி ஒரு நாள் அணிக்கு கேப்டனாக இருக்கும் பொழுது அனில் கும்ப்ளே இந்திய டெஸ்ட் அணிக்கு கேப்டனாக செயல்பட்டார். அப்போது இந்திய அணியில் தாமதமாக பயிற்சிக்கு வரும் வீரர்களுக்கு என்ன தண்டனை அளிக்க வேண்டும் என்று கும்ப்ளே விடவும் தோனியிடம் நிர்வாகம் முறையிட்டது.

dhonistand

கும்ப்ளே பயிற்சிக்கு தாமதமாக விரும்பிகளுக்கு ரூபாய் 10,000 அபராதம் விதிக்கலாம் என்று தனது முடிவினை கூறினார். ஆனால் தோனி வித்தியாசமாக பயிற்சிக்கு தாமதமாக வரும் வீரர்கள் மற்றும் இன்றி அனைவருக்கும் தலா 10,000 அபராதம் விதிக்க வேண்டும் என்று கூறினார். அதன் காரணம் ஒருவர் மட்டும் விளையாடும் போட்டி கிரிக்கெட் அல்ல ஒரு அணியாக செயல்பட்டால் மட்டுமே வெற்றி அடைய முடியும்.

India

எனவே வீரர்கள் அனைவரும் ஒரே குரு என்பதை உணர்த்தி எல்லாருக்குமே அபராதத்தை விதித்தால்தான் ஒவ்வொரு தனி வீரருக்கும் இது குழுவுடன் விளையாடும் போட்டி எனவே அனைவரும் ஒழுக்கத்துடன் இருப்பார்கள் என்று முன்னோக்கு சிந்தனையோடு அந்த தண்டனையை விதிக்க சொல்லி நிர்வாகம் கேட்டுக் கேட்டுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement