சர்வதேச போட்டியில் தோனி படைத்த புதிய சாதனை..! அதிர்ச்சியான பாகிஸ்தான் வீரர்..! – யார் தெரியுமா..?

mahi

இந்திய கிரிக்கெட் அணியில் உள்ள தோனியின் கீப்பிங் திறன் குறித்து நாம் அனைவரும் அறிந்த ஒரு விடயம் தான். தோனி அவரது மின்னல் வேக ஸ்டம்பிங் திறனிற்கு பெயர் போனவர். இந்நிலையில் கடந்த ஜூலை 3 ஆம் தேதி இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 போட்டியில் தோனி அதிக ஸ்டாம்பிங் செய்த வீரர் என்ற பாகிஸ்தான் அணியின் கீப்பர் கம்ரான் அக்மல் சாதனையை முறியடித்துள்ளார்.
MS
இங்கிலாந்து மற்றும் இந்தியா விளையாடிய முதல் டி20 போட்டி கடந்த ஜூலை 3 ஆம் தேதி மாஞ்சிஸ்டரில் உள்ள ஓல்ட் ட்ராட்போர்ட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட் செய்து 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்களை எடுத்தது. இதில் தோனி ஜோ ரூட் மற்றும் ஜோன்னி பிரிஸ்டோவ் ஆகியோரை ரன் எதுவும் எடுக்கவிடாமல் ஸ்டம்பிங் செய்து அசத்தினார்.

இந்த போட்டியில் இரண்டு ஸ்டாம்பிங் செய்ததன் மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் அதிக ஸ்டாம்பிங் செய்த கீப்பர் என்ற சாதனையை படைத்துள்ளார் தோனி. இதற்கு முன்னால் பாகிஸ்தான் அணியின் கீப்பர் கம்ரான் அக்மல் டி20 போட்டிகளில் செய்த 31 ஸ்டாம்பிங் தான் சாதனையாக இருந்தது. ஆனால், தற்போது தோனி அந்த சாதனை பட்டியலில் கம்ரான் அக்மளை பின்னுக்கு தள்ளி முதல் இடத்தை பிடித்துள்ளார். தோனி இந்த சாதனையை 91 டி20 போட்டியில் படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
akmal
மேலும், இந்த பட்டியலில் ஆப்கானிஸ்தான் அணியின் விக்கெட் கீப்பர் 3 வது இடத்தில் உள்ளார். அதே போல தோனி அதிக நபர்களை அவுட் செய்த விக்கெட் கீப்பர் பட்டியலிலும் முதல் இடத்தில் உள்ளார்.இதுவரை 91 போட்டிகளில் விளையாடியுள்ள தோனி 82 பேட்ஸ்மேன்களை அவுட் செய்துள்ளார். தோனி இன்னும் ஒரு கேட்ச் பிடித்து விட்டாள் சர்வதேச டி20 போட்டிகளில் 50 கேட்ச் பிடித்த முதல் கீப்பர் என்ற சாதனையையும் படைத்து விடுவார்.