மனைவி மற்றும் மகளுடன் டான்ஸ் ஆடி பிறந்தநாளை கொண்டாடிய தோனி

Ziva
- Advertisement -

இந்திய அணியை பொறுத்தவரை தோனி ஒரு மிகச் சிறந்த கேப்டனாக விளங்கியவர். மேலும் மூன்று வகையான icc தொடர்களையும் கேப்டனாக இருந்து இந்திய அணிக்காக பெற்று கொடுத்துள்ளார் . இன்று அவருடைய பிறந்தநாள் இதனால் தற்போது தோனி வாழ்த்துமழையில் நனைந்து வருகிறார்.

நேற்று தோனி தனது மனைவி மற்றும் மகள், இந்திய அணியின் வீரர்களான ஜாதவ். பண்ட், பாண்டியா ஆகியோருடன் தனது பிறந்த நாளை கொண்டாடினார். அப்போது தனது மகளுடன் அவர் கேக்கை வெட்டி மகிழ்ந்தார்.

- Advertisement -

தோனியின் இந்த பிறந்தநாள் கொண்டாட்டம் தற்போது வீடியோவாக அவரது மனைவி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது

Advertisement