ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவின் 11-வது சீசன் வரும் ஏப்ரல் 7-ம் தேதி தொடங்குகிறது. ஏப்ரல் 7-ம் தேதி தொடங்குகி மே மாதம் 27-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. தொடக்க போட்டி மற்றும் இறுதிப் போட்டிபை மும்பையில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
மொத்தம் 9 நகரங்களில் மொத்தம் 51 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் 60 லீக் ஆட்டங்கள், 3 பிளே ஆஃப் மற்றும் இறுதி ஆட்டம் என ஒட்டுமொத்தமாக 64 ஆட்டங்கள் இடம்பெறுகின்றன. முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி, முன்னாள் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மோத உள்ளன.
இதையும் படியுங்கள் :
சுரேஷ் ரெய்னா மனைவி பிரியங்கா சவுதாரி யார் தெரியுமா !
இந்நிலையில் சென்னை அணியின் கேப்டனான தோனி சென்னை அணியின் ஜெர்சி நிறமான மஞ்சள் நிறத்தை தனது தலைமுடிக்கு அடித்து சென்னை ரசிகர்களை உற்சாகப்படுத்தவுள்ளார். டிவிட்டரில் டோனியின் ஹேர் ஸ்டைலிஸ்டான சப்னா பவ்னானி “சென்னை கேப்டனுக்கு தலையில் மஞ்சள் நிற கலரை பூசிடலாமா” என்று கேட்டுள்ளார்.
Should we colour captain Saab’s Hair yellow? @msdhoni @madOwothair #msd #MSDStrong #Dhoni #msdhoni #Mumbai #IPL11 pic.twitter.com/JVy9ZTDsEb
— Sapna Moti Bhavnani (@sapnabhavnani) March 17, 2018