பியூஷ் சாவ்லா மற்றும் பார்திவ் படேலுடன் சேர்ந்து பாத்ரூமில் கச்சேரி நடத்திய தோனி – வைரலாகும் வீடியோ

Dhoni-2
- Advertisement -

இந்திய அணியின் முன்னணி வீரரான மகேந்திர சிங் தோனி இங்கிலாந்தில் நடைபெற்ற உலக கோப்பை அரையிறுதிப் போட்டிக்கு பின்பு இந்திய அணியில் இடம்பெறவில்லை. மேலும் சமீபத்தில் வெளியான பி.சி.சி.ஐ வீரர்கள் ஒப்பந்தப் பட்டியலிலும் இவரது பெயர் நீக்கப்பட்டதால் இனி இந்திய அணியில் தோனியின் இடம் கேள்விக்குறி தான் என்று செய்திகள் வெளியாகி ரசிகர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தின.

- Advertisement -

இந்நிலையில் தற்போது அடுத்த மாதம் தொடங்க இருக்கும் ஐபிஎல் தொடருக்காக காத்திருக்கும் தோனி மார்ச் 1 ஆம் தேதி சென்னையில் பயிற்சியை மேற்கொள்ள உள்ளார். ஆனால் அதற்கு முன்னர் தோனி ஆசிய லெவன் அணியில் விளையாட இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தோனி குறித்து வெளியாகும் ஒவ்வொரு செய்தியும், புகைப்படமும், வீடியோவும் இணையத்தில் தொடர்ந்து ஹிட் அடித்து வருகின்றன.

அந்த வகையில் தற்போது தோனி சென்னை அணியின் சக வீரரான பியூஷ் சாவ்லா மற்றும் பார்திவ் படேல் ஆகியோருடன் இணைந்து பாத்ரூமில் அமர்ந்துகொண்டு பாட்டு பாடுவது போன்ற வீடியோ ஒன்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இதில் நண்பர்களுடன் பாத்ரூம் மேடையில் அமைந்திருக்கும் தோனி அவர்கள் பாட தானும் வாயசைத்து ஜாலியாக நேரத்தை கழித்துக் கொண்டிருக்கிறார்.

இதனை வீடியோவாக எடுத்து அவரது நண்பர்கள் இணையத்தில் வெளியிட்டதும் குறிப்பிடத்தக்கது. வெளியான சிறிது நேரத்திலேயே தோனி ரசிகர்கள் இந்த விடியோவை இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

Advertisement