இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், முன்னணி வீரருமான தோனி கடந்த உலக கோப்பை தொடருக்கு பின்னர் இந்திய அணி இதுவரை விளையாடவில்லை. இதனால் தோனி விரைவில் ஓய்வு முடிவை அறிவிப்பார் என்று எதிர்பார்த்து வரும் நிலையில் தோனி தனது ஓய்வு குறித்து எந்த ஒரு அறிவிப்பையும் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடாமல் இருக்கிறார்.
இந்நிலையில் நேற்று திடீரென தோனி ஓய்வு பெற்று விட்டார் என்ற ஹேஷ் டேக்குடன் செய்திகள் சமூக வலைத்தளத்தில் அதிக அளவு பகிரப்பட்டன. ஆனால் இது ஒரு பொய்யான செய்தி என்றும் இது தோனி குறித்து ஏற்பட்ட ஒரு புரளி என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏனெனில் தற்போது கோலி உள்ளூர் அணி வீரர்களுடன் இணைந்து பயிற்சியை மேற்கொண்டு வருகிறார்.
மேலும் அடுத்த ஆண்டு டி20 உலக கோப்பை தொடரில் தோனி விளையாடுவார் என்று தெரிகிறது இதனால் தற்போது தோனி ஓய்வு முடிவை அறிவிக்க மாட்டார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தோனி விளையாடுகிறாரோ இல்லையோ ஆனால் வரும் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக கேப்டனாக தோனி விளையாடுவார் என்று சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இதனால் தோனி ரசிகர்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தோனி அடுத்த டி20 உலகக்கோப்பை வரை விளையாட நினைத்தாலும் உலகக்கோப்பை அணியில் அவர் தேர்வாகமாட்டார் என்பதும் நிதர்சனமான உண்மைதான்.